இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைய வேண்டும்: ஏ.பி.பரதன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஹிரேன் முகர்ஜியின் நூற்றாண்டு விழா கொல்கத்தாவில் நடந்தது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத்தும், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதனும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் ஏ.பி.பரதன் உருக்கமாக பேசினார். இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைய வேண்டும் என அப்போது அவர் விருப்பம் தெரிவித்தார்.
பரதன் பேசுகையில், ஹிரேன் முகர்ஜி மறைந்தபோது இரு கட்சிகளும் இணைய வேண்டும் என ஆசைப்பட்டார். அதுதான் அவரது கடைசி ஆசையாக, நிறைவேறாத ஆசையாக இருந்தது. அது கனிய வேண்டிய நேரம் வந்துள்ளது. அதற்காக இரு கட்சிகளும் பாடுபட வேண்டும்.
ஹிரேன் ஆசைப்பட்டது நடக்க வேண்டும். கருத்து வேறுபாடுகள் மறைய வேண்டும்.
இந்த மேடையைப் பயன்படுத்தி நான் எனது கருத்துக்களை யார் மீதும் திணிக்க விரும்பவில்லை. இருப்பினும் ஹிரேன் விரும்பியதைத்தான் இங்கு மீண்டும் கூறியுள்ளேன் என்றார் பரதன்.
பரதனின் பேச்சை பிரகாஷ் காரத்தும், மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டச்சார்யாவும் அமைதியாக கவனித்துக் கொண்டிருந்தனர்.
சிபிஐ பிரிந்த கதை ...
1964ம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டது. அதிலிருந்து பிரிந்தவர்கள் உருவாக்கிய கட்சிதான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்).
64 தேர்தலில் சிபிஐயின் சில முடிவுகளால் அதிருப்தி அடைந்தவர்கள் கட்சியிலிருந்து பிரிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை தோற்றுவித்தனர். அதன் பிறகு இரு கட்சியினரும் விரோத மனப்பான்மையுடன்தான் செயல்பட்டு வந்தனர்.
ஆனால் போகப் போக குரோத மனப்பான்மை மாறி இரு கட்சிகளும் இணக்கத்துடன் செயல்பட ஆரம்பித்தன. இதன் விளைவாக இடதுசாரி கூட்டணி, 1977ம் ஆண்டு மேற்கு வங்க மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்தது.
அதன் பின்னர் இரு கட்சிகளின் கூட்டு செயல்பாடுகள் மேலும் வலுவடைந்தது. இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாகவும் இடதுசாரி கூட்டணி திகழ ஆரம்பித்தது.
இந்த நிலையில்தான் இடதுசாரிகள் இணைய வேண்டும் என பரதன் விருப்பம் தெரிவித்துள்ளார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications