48 புலிகள் பலி - முக்கிய தளம் பிடிபட்டது: ராணுவம்

இலங்கையில் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றிவிட்டதாக அவ்வப்போது இலங்கை ராணுவம் செய்திகள் வெளியிட்டு வருகிறது. ஆனால் இதுகுறித்து விடுதலைப் புலிகள் பெரிதாக எந்த ரியாக்ஷனும் காட்டுவதில்லை.
2002-ம் ஆண்டிலிருந்து இதுவரை 4700 விடுதலைப் புலிகளை தங்கள் ராணுவம் கொன்று விட்டதாகவும், பதிலுக்கு 425 ராணுவத்தினரை மட்டுமே இழந்திருப்பதாகவும், இந்த போருக்கு இந்தியா பேருதவி புரிந்ததாகவும் சமீபத்தில் இலங்கை ராணுவ தளபதி சனத் பொன்சேகா தெரிவித்திருந்தார்.
இப்போது அவர் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் புலிகளின் முக்கிய முகாமைக் கைப்பற்றியதாகக் கூறியுள்ளார். அவர் அறிக்கையிலிருந்து...
வடக்கில் முல்லைத் தீவு காட்டுப் பகுதிக்கு அருகிலிருக்கும் புலிகளின் முக்கியக் கேந்திரம் மைக்கேல் பேஸ். இங்கிருந்துதான் புலிகள் தங்கள் வான் வழித் தாக்குதல்களை நடத்துவதாகக் கூறப்படுகிறது.
200 சதுர மீட்டர் பரப்பில் அமைந்துள்ள இந்த மிக முக்கியமான ராணுவ தளத்தைக் கைப்பற்ற யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, வெலிஓயா பகுதிகளிலிருந்து ராணுவத்தினர் ஒருங்கிணைந்து தாக்குதல் தொடுத்தனர், கடந்த மூன்று தினங்களாக.
இச்சண்டையில் 17 புலிகள் நேற்று கொல்லப்பட்டனர்.
வெலிஓயா அருகே வடக்கு கிரிப்பன்வேவாவில் நடந்த சண்டையில் 6 போராளிகள் கொல்லப்பட்டனர். அம்பட்டன்குளம் அருகே நடந்த சண்டையில் இரு புலிகளும், நவந்தகுளம் சண்டையில் 2 புலிகளும், துனிக்கை, நொச்சிக்குளம் பகுதிகளில் தலா இரண்டு விடுதலைப் புலிகளும் கொல்லப்பட்டனர்.
நொச்சிக்குளம் பங்கர் ஒன்றைக் கைப்பற்றியதோடு, அங்கிருந்த மூன்று புலிகளையும் கொன்றுவிட்டதாக அந்த அறிக்கையில் கூறியுள்ளார் பொன்சேகா.
ஆனால் ராணுவத் தரப்பில் ஒரு வீர்ர் மட்டுமே பலியானதாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து புலிகள் தரப்பில் எந்த பதிலறிக்கையும் இல்லை.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications