ஆதரவு வாபஸ் தொடர்பாக வெற்றுக் கூச்சல் போடும் சிபிஎம்: பாஜக
கொல்கத்தா: ஆதரவை வாபஸ் பெறப் போகிறோம், போகிறோம் என்று வெற்றுக் கூச்சல் போட்டு வருகின்றன இடதுசாரிகள் என்று பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு ராஜ்நாத் சிங் பேசுகையில், அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக தொடர்ந்து காங்கிரஸுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது இடதுசாரி முன்னணி. ஆதரவை வாபஸ் பெறுவோம் என சிபிஎம் மிரட்டி வருகிறது. ஆனால் அவர்கள் சொன்னதை செய்யாமல் வெறுமனே வெற்றுக்கூச்சல் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
ஒன்று அவர்கள் ஆதரவை வாபஸ் பெற வேண்டும். அல்லது வெற்றுக் கூச்சல் போடுவதை நிறுத்த வேண்டும்.
அவர்கள் எழுதிய கடிதத்திற்கு இன்னும் பதில் வரவில்லை. அதற்காக காத்திருப்பதாக காரத் கூறுகிறார். அப்படி இருக்கையில், ஜி-8 மாநாட்டுக்குப் போனால் ஆதரவை வாபஸ் பெறுவோம் என்று ஏன் கூறிக் கொண்டிருக்கிறார்கள் எனத் தெரியவில்லை.
கடந்த ஒரு வருடமாகவே அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக நாடகமாடி வருகிறது சிபிஎம். ஆதரவை வாபஸ் வாங்கப் போவதாக கூறிக் கொண்டே அதைச் செய்யாமல் காலம் கடத்திக் கொண்டிருக்கின்றனர்.
தற்போதுள்ள நிலையில் அணு சக்தி ஒப்பந்தத்தை பாஜக ஏற்காது. நமது நாட்டின் சுய மரியாதையை எந்தவிதத்திலும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என்றார் ராஜ்நாத் சிங்.
-
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி!












Click it and Unblock the Notifications