குலாம் நபி ஆசாத் திடீர் ராஜினாமா - நம்பிக்கை வாக்கு கோரவில்லை
ஸ்ரீநகர்: மக்கள் ஜனநாயகக் கட்சி, அரசுக்கு அளித்து வந்தஆதரவைத் திரும்பப் பெற்றுவிட்ட நிலையில் இன்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் குலாம் நபி ஆசாத் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். பெரும்பான்மைக்குப் போதுமான பலம் கிடைக்காததால் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை அவர் வாபஸ் பெற்றார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் முப்தி முகம்மது சயீத்தின் மக்கள் ஜனநாயகக் கட்சி கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.
அமர்நாத் கோவில் போர்டுக்கு நிலம் கொடுத்தது தொடர்பாக வெடித்த போராட்டத்தைத் தொடர்ந்து அரசுக்கு அளித்து வரும் ஆதரவைத் திரும்பப் பெறுவதாக மக்கள் ஜனநாயகக்கட்சி அறிவித்தது. இதனால் சிறுபான்மை அரசாக மாறியது ஆசாத் அரசு.
இதையடுத்து 7ம்தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஆளுநர் என்.என். வோரா ஆசாத்துக்கு உத்தரவிட்டார். அதன்படி இன்று சிறப்பு சட்டசபைக் கூட்டம் கூட்டப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பெரும்பான்மைக்குத் தேவையான 45 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற முடியாததால், நம்பிக்கை கோரும் தீர்மானத்தை திரும்பப் பெற தீர்மானித்தார் ஆசாத். மேலும் தனது முதல்வர் பதவியையும் அவர் ராஜினாமா செய்ய முடிவெடுத்து ஆளுநர் இல்லத்திற்கு புறப்பட்டு சென்றார்.
-
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications