ஜி-8 மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் கிளம்பினார் மன்மோகன்

ஜப்பானில் ஜி-8 எனப்படும் வளர்ந்த நாடுகளின் தலைவர்கள் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் இந்தியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் புற உறுப்பு நாடுகளாக உள்ளன.
ஜப்பானின் ஹொக்கைடோ தீவில் மாநாடு நடைபெறுகிறது. இதற்காக இன்று காலை மன்மோகன் சிங் ஜப்பான் புறப்பட்டுச் சென்றார். 3 நாட்கள் அவர் ஜப்பானில் இருப்பார்.
தனது 3 நாள் பயணத்தின்போது 2 முறை அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை சந்திக்கிறார் மன்மோகன் சிங். புதன்கிழமை காலை 7.40 மணிக்கு முதலில் சந்திப்பார்கள். பின்னர்கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்து காலை சிற்றுண்டி விருந்தின்போது மீண்டும் சந்திப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது ஜப்பான் பயணம் குறித்து நேற்று பிரதமர் மன்மோகன் சிங் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், எரிசக்தி, உணவுப் பாதுகாப்பு, உலகப் பொருளாதாரம், வர்த்தகம், தொழில்நுட்பப் பரிமாற்றம் உள்ளிட்டவற்றில், இந்தியாவின் நிலையை தெளிவுபடுத்துவேன்.
பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வை சமாளிக்க எண்ணை வள நாடுகளும், அதை பயன்படுத்தும் நாடுகளும் கூட்டாக நடவடிக்ைக எடுக்க வேண்டிய அவசியத்தை மாநாட்டின்போது வலியுறுத்துவேன்.
உலக வெப்பமயமாதலைத் தடுத்தல் குறித்தும் பேசவுள்ளேன். நமது நாட்டின் முக்கிய நோக்கமாக வறுமையை ஒழித்தல் உள்ளது. அதற்கு விரைவான, நீடித்த பொருளாதார வளர்ச்சி அவசியத் தேவையாகும் என்று கூறியுள்ளார் பிரதமர்.
ஜி-8 அமைப்பில் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
இதுதவிர புற உறுப்பு நாடுகளாக இந்தியா, சீனா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா, மெக்ஸிகோ ஆகிய நாடுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications