ஆதரவு வாபஸ்-10ம் தேதி ஜனாதிபதியிடம் இடதுசாரிகள் கடிதம்

'கெடு' இன்று முடிந்தது:
அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக விளக்கம் அளிக்க இடதுசாரிக் கட்சிகள் விடுத்த கெடு இன்றுடன் முடிவடைந்தது.
மீண்டும் பேசலாம்-காங். அழைப்பு:
இந் நிலையில் அணுசக்தி விவகாரம் தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என மத்திய அரசு இடதுசாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இடதுசாரி கட்சிகள் மத்திய அரசிற்கு அனுப்பிய கடிதத்திற்கு, மத்திய அரசு பதில் கடிதம் அனுப்பி உள்ளது. அதில் இடதுசாரி கட்சிகளுடன் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்த மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
எச்சரிக்கையை மீறிய பிரதமர்:
ஜப்பான் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்ளக் கூடாது, அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக பேசக் கூடாது என இடதுசாரிகள் எச்சரித்திருந்தனர். ஜப்பான் போகக் கூடாது, சர்வதேச அணு சக்தி கவுன்சிலை இந்தியா அணுகுவது குறித்து 7ம் தேதிக்குள் விளக்க வேண்டும் என்று கூறி பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு இடதுசாரிகள் கடிதம் எழுதியிருந்தனர்.
ஆனால் இந்தக் கடிதங்களுக்கு இதுவரை பதில் வரவில்லை. மேலும் இடதுசாரிகளின் எச்சரிக்கையையும் மீறி பிரதமர் ஜப்பான் கிளம்பிவிட்டார்.
இந் நிலையில் 10ம் தேதி ஆதரவு வாபஸ் கடிதத்தை ஜனாதிபதி பிரதீபா பாட்டீலிடம் வழங்கப் போவதாக பார்வர்ட் பிளாக் கட்சியின் பொதுச் செயலாளர் தேப்ரதா பிஸ்வாஸ் இன்று நிருபர்களிடம் தெரிவித்தார்.
இந்த விஷயத்தில் 4 இடதுசாரிக் கட்சிகளும் ஒருமனதாக முடிவெடுத்துவிட்டதாக அவர் இன்று டெல்லியில் நிருபர்களிடம் தெரிவித்தார்.
தற்போதுள்ள சூழ்நிலையில் இடதுசாரிகளின் ஆதரவு வாபஸால் மத்திய அரசு கவிழும் நிலை நீங்கி விட்டது. இதனால் இடதுசாரிகளின் முடிவு முன்பு ஏற்படுத்திய பரபரப்பும், பதட்டமும் இப்போது இல்லை.
இந் நிலையில் இடதுசாரிகளின் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் மீண்டும் பேச்சு நடத்த மத்திய அரசு விடுத்துள்ள அழைப்பு குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
-
'அதிக பிரசங்கித்தனம்' சிபிஎம் கண்டனம் குறித்த கேள்விக்கு பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த ரியாக்சன்! -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications