காங்-முலாயமின் 'மிட்நைட் டீல்': பாஜக விமர்சனம்
லக்னோ: காங்கிரஸுக்கும், சமாஜ்வாடி கட்சிக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்திற்கு முன்பு நள்ளிரவில் நடந்த டீல் குறித்து மக்களுக்கு இரு கட்சிகளும் தெரியப்படுத்த வேண்டும் என்று பாஜக துணைத் தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறியுள்ளார்.
இதுகுறித்து நக்வி லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசுகையில், இரு கட்சிகளுக்கும் இடையிலான உறவு சந்தர்ப்பவாதத்தின் மறு உருவம். இந்த உறவு ஏற்படுவதற்கு முன்பு இரு கட்சிகளுக்கும் இடையே ஏற்பட்ட 'நள்ளிரவு ஒப்பந்தம்' மகா மோசமானது. இது நிச்சயம் நாட்டு நலனுக்கு உகந்ததல்ல. அது குறித்து மக்கள் அறிய ஆவலாக உள்ளனர். எனவே அந்த 'மிட்நைட் டீல்' குறித்து இரு கட்சிகளும் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.
தன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை சிபிஐ விசாரிக்காமல் நீர்த்துப் போகச் செய்ய வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன்தான் காங்கிரஸுடன் கை கோர்க்க முலாயம் சிங் முடிவெடுத்துள்ளார். மேலும், நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் தொழிலதிபர் அனில் அம்பானிக்கு காங்கிரஸ் அரசு சாதகமாக நடக்க வேண்டும் என்றும் அவர் நிபந்தனை போட்டுள்ளார்.
அணு சக்தி ஒப்பந்தத்தைத்தான் இதுவரை காங்கிரஸ் கட்சி மக்களிடம் தெளிவுபடுத்தாமல் உள்ளது. குறைந்தது, சமாஜ்வாடி கட்சியுடன் என்ன மாதிரியான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதையாவது அது தெளிவாக சொல்ல வேண்டும்.
காங்கிரஸுக்கும், சமாஜ்வாடிக்கும் இடையே ஏற்பட்டுள்ள உறவு நிச்சயம் புனிதமானதல்ல. அதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. இந்த உறவை நிச்சயம் நாட்டு மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.
லோக் சபா தேர்தலுக்கு முன்பாக பகுஜன் சமாஜ் கட்சியுடனோ அல்லது வேறு கட்சியுடனோ பாஜக கூட்டணி வைக்காது. தேர்தலுக்குப் பிறகும் கூட்டணி வைக்காது. இம்மாநில மக்களை மோசடி செய்ததில் பகுஜன் சமாஜ் கட்சிக்கும், சமாஜ்வாடி கட்சிக்கும் சம பங்கு உள்ளது. உ.பி. மாநிலத்தின் அவல நிலைக்கு இருகட்சிகளுமே கூட்டாக பொறுப்பேற்க வேண்டும்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் காங்கிரஸும், மக்கள் ஜனநாயகக் கட்சியும் சேர்ந்து ஒரு நாடகத்தை அரங்கேற்றி முடித்துள்ளன. பிரிவினைவாத சக்திகளிடம் சரணடைய காங்கிரஸை, மக்கள் ஜனநாயக கட்சி நிர்பந்தித்து அதில் வெற்றியும் பெற்றுள்ளது. இன்னும் சில காலத்தில் அங்கு சட்டசபையின் ஆயுள்காலம் முடிவடையவுள்ளநிலையில் இப்போது ஆட்சிக்கு ஆதரவை திரும்பப் பெற்று நாடகமாடியுள்ளனர் என்றார் நக்வி.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications