நெல்லை அருகே தந்தை-மகள் அடித்துக் கொலை
நெல்லை: நெல்லை அருகே ஒரே வீட்டில் வசித்து வந்த தந்தையையும் மகளையும் யாரோ சிலர் அடித்துக் கொன்றுள்ளனர்.
நெல்லை அருகேயுள்ள மேலச் செவல் மெயின்ரோட்டை சேர்ந்தவர் அய்யம்பெருமாள். விவசாயி. இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி கண்ணம்மாள். இரண்டாவது மனைவி குருவம்மாள். முதல் மனைவிக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இரண்டாவது மனைவி குருவம்மாளுக்கு 3 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர்.
இரண்டாவது மனைவியின் மகள் முத்துசெல்வி. இவருக்கும் தாழையுத்து அருகேயுள்ள தென்கலத்தை சேர்ந்த இசக்கிதுரை என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு பூபதி என்ற மகன் உள்ளான்.
முத்துசெல்விக்கும், இசக்கிதுரைக்கும் திருமணம் ஆனதில் இருந்தே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் முத்துசெல்வி கணவரை பிரி்ந்து தந்தை வீட்டில் மகனுடன் குடியிருந்து வந்தார். கடந்த சில மாதங்களாக இசக்கிதுரை தன்னுடன் சேர்ந்து குடும்பம் நடத்தும்படி முத்துசெல்வியை வற்புறுத்தியதாக தெரிகிறது.
அய்யாம்பெருமாளின் மகன் சுப்பிரமணியன். சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர் மனைவியுடன் அம்பாசமுத்திரத்தில் குடியிருந்து வருகிறார். சென்னையில் இருந்து அம்பாசமுத்திரம் வரும்போது தனது தந்தையின் செலவிற்கு பணம் கொடுப்பது வழக்கம்.
கடந்த 2 நாட்களுக்கு முன் சுப்பிரமணியன் நெல்லைக்கு வந்துள்ளார். நேற்று மாலை சுப்பிரமணியன் தனது தந்தைக்கு பணம் கொடுப்பதற்காக வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது தந்தை அரிவாளால் வெட்டப்பட்டு இறந்துகிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் வீட்டின் பின்புறம் சென்றுபார்த்தபோது தங்கை முத்துசெல்வி உருட்டு கட்டையால் தலையில் தாக்கப்பட்டு இறந்து கிடந்தது கண்டு மேலும் அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து சுப்பிரமணியன் மூன்னிர்பள்ளம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற எஸ்பி தினகரன் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டார். இச்சம்பவத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications