தங்கக் காசு மோசடி: பெண் தொழிலதிபர் பத்மா கைது

சென்னை சேத்துப்பட்டில் செயல்பட்டு வந்த கோல்ட்குவெஸ்ட் நிறுவனம் தங்கக் காசு மோசடித் திட்டத்தின் மூலம் பல கோடி பணத்தை மோசடி செய்துள்ளது. இதுதொடர்பாக இதுவரை 24 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புகார் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து நடவடிக்கையில் இறங்கிய போலீஸார், அந்த நிறுவனத்தை மூடி சீல் வைத்தனர். நிறுவனத்திற்குச் சொந்தமான ரூ. 190 கோடி மதிப்புள்ள சொத்துக்களும் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.
இதில் ரூ.50 கோடி ரொக்கம், ரூ.90.5 கோடி பங்கு பத்திரங்கள், ரூ.35 கோடி அசையா சொத்துகள், ரூ.15 கோடி மதிப்புள்ள கார் போன்ற அசையும் சொத்துகள் அடக்கம்.
தற்போது இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. இதுவரை நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் புஷ்பம் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் ஏஜென்டாக செயல்பட்டு வந்த பெண் தொழிலதிபர் பத்மாவை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர் கீழ்ப்பாக்கம் ஆஸ்பிரின் கார்டன் பகுதியில், மிகப் பெரிய பங்களாவில் வசித்து வருகிறார்.
நேற்று காலை இவரது வீட்டுக்குப் போலீஸார் போனபோது அவர் அங்கு இல்லை. விசாரித்தபோது கிண்டியில் உள்ள லீ மெரிடியன் ஹோட்டலில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அங்கு விரைந்த போலீஸார் அவரை வளைத்துப் பிடித்துக் கைது செய்தனர். பின்னர் வீட்டில் சோதனை நடந்தது.
இதில், ரூ.11 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. ஹோண்டா சிட்டி, பி.எம்.டபிள்யூ., பென்ஸ் ஆகிய 3 சொகுசு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
பத்மா வசித்த பங்களாவின் மதிப்பு ரூ.4 கோடி என்றும், அதே கீழ்ப்பாக்கம் பகுதியில் ரூ.47 லட்சம் மதிப்புள்ள அடுக்குமாடி வீடு ஒன்றும், ரூ.40 லட்சம் மதிப்புள்ள அடுக்குமாடி வீடு ஒன்றும் இருப்பதாகவும், அதுதொடர்பான ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளதாகவும் போலீசார் கூறினார்கள்.
கைது செய்யப்பட்ட பத்மா போலீஸாரிடம் பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
எனது சொந்த ஊர் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி ஆகும். 15 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு திருமணம் நடந்தது. எனது கணவர் பெயர் ரவிசங்கர். அவர் பிரிந்து சென்றுவிட்டார். எனது கணவர் போன பிறகு, நான், எனது 2 மகன்களுடன் மிகவும் கஷ்டப்பட்டேன். வாழ்க்கையை நடத்த கடும் போராட்டம் நடத்தினேன்.
எப்படியாவது வாழ்ந்து காட்டவேண்டும் என்ற வைராக்கியம் எனது மனதில் கொளுந்துவிட்டு எரிந்தது. பி.காம். பட்டப்படிப்பு படித்துள்ள நான், முதலில் வேலை தேடினேன். வேலை கிடைக்கவில்லை. அந்த நேரத்தில்தான் குயிஸ்நெட்' நிறுவனத்தின் அறிமுகம் எனக்கு கிடைத்தது.
2001-ம் ஆண்டு அந்த நிறுவனத்தில் உறுப்பினராக சேர்ந்து படிப்படியாக ஏஜெண்டு அந்தஸ்துக்கு உயர்ந்தேன். அதில், கோடி, கோடியாக கமிஷன் பணம் கொட்டியது. சட்டப்பூர்வமாக அந்த நிறுவனம் செயல்பட்டது. நான் யாரையும் மோசடி செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் செய்யவில்லை. என்னால் ஏராளமான பேர் பலன் அடைந்துள்ளனர். நான் எந்த தவறும் செய்யவில்லை என்று கூறியுள்ளார் பத்மா.
முழுமையான விவரங்களை அவர் இதுவரை சொல்லவில்லை.எனவே அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
பத்மா நேற்று மாலை சென்னை எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். பத்மாவை வருகிற 21-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து பத்மா சென்னை புழல் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
-
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே












Click it and Unblock the Notifications