நெல்லை ஆவினில் கலப்படம்?

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லை ஆவின் பாலில் கலப்படம் செய்யப்படுவதாக கலெக்டரிடம் மக்கள் புகார் செய்துள்ளனர்.

நெல்லை ஆவின் நிறுவனம் மூலம் பச்சை (4.5 சதவீதம்), நீலம் (3.5 சதவீதம்) மற்றும் ஆரஞ்சு வண்ண பாக்கெட்கள் மூலம் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள பால் உறபத்தியாளர்களிடம் இருந்து பல்வேறு சொசைட்டிகள் மூலம் ஆவின் நிறுவனம் பால் கொள்முதல் செய்கிறது.

பின்னர் பதப்படுத்தப்பட்டு பாக்கெட் மூலம் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த ஆவின் பாலில் கலப்படம் அதிகமாக உள்ளது என்று தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.

இதனால் பொதுமக்கள் குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான பால் கலப்படமாக விற்பனை செய்து வருவதால் மக்களின் உடல் நலம் பெரிதாக பாதிக்கப்படுவதாக மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

பாலில் மாசுக்கள், அதிக அளவு தண்ணீர் கலந்திருப்பதாகவும், சரியான முறையில் பதப்படுத்தப்படாத நாள்பட்ட பால் தரப்படுவதாகவும் கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களாக வண்ணார்பேட்டை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் அதிக அளவில் கலப்பட ஆவின் பால் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இதே போல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இதே புகார்கள் எழுந்துள்ளது.

இந்தக் கலப்படத்துக்குக் காரணம் அதிகாரிகளா அல்லது பால் கொள்முதல் செய்யப் படும் இடத்திலேயே இப்படி நடக்கிறதா என ஆராயுமாறு நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+