தொழிற்சங்க அங்கீகாரம்-பாமகவுக்கு என்எல்சி எச்சரிக்கை
நெய்வேலி: பல்வேறு தொழிற்சங்கங்களை இணைத்துக் கொண்டு பாமக தொழிற்சங்கம் போராட்டம் நடத்தினால் அதன் அங்கீகாரம் மறு பரிசீலனை செய்யப்படும் என நெய்வேலி அனல்மின் கழக நிர்வாகம் எச்சரித்துள்ளது.
போனஸ் மற்றும் போக்குவரத்துப் படி உள்ளிட்டவை தொடர்பாக புதிய ஒப்பந்தம் ஏற்படுத்தி அதற்கானத் தொகையை நிலுவைத் தொகையுடன் வழங்க வலியுறுத்தி பாட்டாளித் தொழிற்சங்கம் தலைமையிலான 12 தொழிற்சங்க கூட்டமைப்பு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளது.
காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அது எச்சரித்துள்ளது.
இந்நிலையில் பாமக தொழிற்சங்கம் பேச்சுவார்த்தையில் இல்லாத சங்கங்களை இணைத்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபடுவதால் அதன் அங்கீகாரத்தை மறுபரிசீலனை செய்ய நேரிடும் என்று என்.எல்.சி. நிர்வாகம் மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளது.
என்.எல்.சி.யில் தற்போது திமுகவின் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் (தொ.மு.ச) மற்றும் பாமகவின் பாட்டாளி தொழிலாளர் சங்கம் ஆகியவை மட்டுமே அங்கீகாரம் பெற்ற தொழிற்சங்கங்களாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications