சுய உதவிக்குழு பெண்களிடம் ரூ.30 லட்சம் மோசடி
வள்ளியூர்: நெல்லை அருகே சுய உதவுக் குழுவைச் சேர்ந்த பெண்களிடம் தங்க பிஸ்கட் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.30 லட்சம் மோசடி செய்துள்ளனர்.
இதுபற்றிக் கூறப்படுவதாவது:
நெல்லை மாவட்டம் காவல் கிணறு அருகே உள்ள லெப்பை குடியிருப்பை சேர்ந்தவர் ஜெயபால். செங்கல், ஓடு விற்பனை செய்து வருகிறார். இவரது மனைவி அன்னபாய்.
இவர்கள் பணகுடி, லெப்பை குடியிருப்பு, ஆவரைகுளம் பகுதிகளில் சுய உதவிக் குழு பெண்கள் மற்றும் சிலரிடம் வெளிநாட்டில் இருந்து தங்க பிஸ்கட் வாங்கி தருவதாக கூறி பல லட்சம் ரூபாய் வசூலித்துள்ளனர். ஆனால், தங்க பிஸ்கட் வாங்கி கொடுக்கவில்லை.
மேலும் ஏலச்சீட்டு நடத்தி அந்த பணத்தை திருப்பித் தராததாலும், சிலரிடம் நகை உள்ளிட்ட பொருள்களையும், வாங்கி மோசடி செய்துள்ளனர். இவற்றின் மதிப்பு சுமார் ரூ.30 லட்சம் வரை இருக்கும் என தெரிகிறது.
இந்நிலையில் ஜெயபால்-அன்னபாய் இருவரும் திடீரென ஊரை காலி செய்துவிட்டு தலைமறைவாகி விட்டனர். அவர்களிடம் ஏமாந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் ஆத்திரமடைந்து பணகுடி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். தங்கள் பணத்தை மீட்டு தருமாறு அவர்கள் போலீசாரிடம் கோரிக்கை வைத்தனர்.
சப்-இன்ஸ்பெக்டர் கவுரி மனோகரி இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications