மோடிக்கு அமெரிக்கா மீண்டும் விசா மறுப்பு

கடந்த 2005ம் ஆண்டு அமெரிக்கா செல்ல சுற்றுலா விசா கோரி மோடி விண்ணப்பித்தார். ஆனால் குஜராத் கலவரத்தைக் காரணம் காட்டி அவருக்கு விசா தரக் கூடாது என மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து மோடிக்கு விசா தர அமெரிக்க அரசு மறுத்து விட்டது.
இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இதையடுத்து இந்திய அரசும் தனது அதிருப்தியை தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் மீண்டும் அமெரிக்கா செல்ல திட்டமிட்டார் மோடி. நியூஜெர்சியில் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள குஜராத் கலாச்சார மாநாட்டில் கலந்து கொள்ள வருமாறு அவருக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. இதில் கலந்துகொள்ள சுற்றுலா விசா கோரி மோடி மீண்டும் விண்ணப்பித்திருந்தார்.
ஆனால் அவருக்கு விசா வழங்கக் கூடாது என்று முன்பு எடுக்கப்பட்ட முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்பதைக் காரணம் காட்டி மீண்டும் மோடிக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சக அதிகாரி பெலிஸ் கெயர் கூறுகையில், ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவை மறு பரிசீலனை செய்யும் சூழல் உருவாகியிருப்பதாக நாங்கள் கருதவில்லை. எனவே குடியேற்ற சட்டத்தின் கீழ் சுற்றுலா விசா வழங்க இயலவில்லை என்று மோடிக்குத் தெரிவித்து விடுமாறு அமெரிக்க குடியேற்றத் துறைக்கு அறிவுறுத்தியுள்ளோம் என்றார்.
மேலும் அவர் கூறுகையில், நரேந்திர மோடி தன் மீதான மனித உரிமை மீறல் புகார்கள், வன்முறை புகார்களை பொய் என்று நிரூபிக்க வேண்டும். இதன் மூலம் தான் சுற்றுலா விசாவில் அமெரிக்க வர தகுதியானவர் என்பதை அமெரிக்க மக்களுக்கும், அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்திற்கும் அவர் நிரூபிக்க வேண்டும் என்றார் கெயர்.
-
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications