செங்கோட்டை: 15 மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பிப்பு!
Subscribe to Oneindia Tamil

மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் புளியரை எஸ் வளைவு பகுதி அமைந்துள்ளது. இங்கு இரவும், பகலும் போக்குவரத்து மிக அதிகமாக இருக்கும்.
ஆனாலும் இந்த எஸ் வளைவு பகுதி குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனை சரி செய்ய தேசிய நெடுஞ்சாலை துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந் நிலையில் நள்ளிரவு 1 மணிக்கு சங்கரன்கோவிலிலிருந்து கொல்லத்திற்கு சிமெண்ட் ஏற்றிச் சென்ற லாரி புளியரை எஸ் வளைவில் வரும்போது திடீரென்று பழுதாகி நின்றுவிட்டது.
அது ஒரு குறுகலான இடம் என்பதால் விடிய விடிய அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாமல் வரிசையில் நின்றன.












Click it and Unblock the Notifications