'பிழைக்குமா' குன்னூர் பாஸ்டியர் இன்ஸ்டிடியூட்?-அதிகாரிகள் ஆய்வு
குன்னூர்: நீலகிரி மாவட்டம், குன்னூரில் உள்ள பாஸ்டியர் இன்ஸ்டியூட்டில் தொடர்ந்து தடுப்பூசி மருந்து தயாரிக்கும் பணியை மேற்கொள்ள முடியுமா என்பது குறித்து மத்திய குழு ஆய்வு மேற்கொண்டது.
நீலகிரி மாவட்டம், குன்னூரில் புகழ் பெற்ற பழமை வாய்ந்த பாஸ்டியர் இன்ஸ்டியூட் செயல்பட்டு வருகிறது. இங்கு கக்குவான் இருமல், தொண்டை அடைப்பான், ரண ஜன்னி போன்ற பல நோய்களுக்கு தடுப்பு மருந்து தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தை ஆய்வு செய்த உலக சுகாதாரா நிறுவனம் தரமான மருந்து உற்பத்தி செய்ய போதுமான கட்டமைப்பு வசதி இல்லை என்று கருத்து தெரிவித்திருந்தது.
இதனால் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இந்த நிறுவனத்தை மூட முடிவு செய்தது. ஆனால் இதற்கு இங்கு பணிபுரியும் ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மருந்து தரக்கட்டுபாட்டு துறையில் இருந்து சுரேந்தர் சிங் தலைமையில் 6 பேர் கொண்ட குழு பாஸ்டியர் நிறுவனத்தை ஆய்வு மேற்கொண்டனர். இன்றும் ஆய்வு நடத்த உள்ளனர்.
ஆய்வு செய்த பின்பு இது குறித்த ஆய்வை மத்திய அரசிடம் கொடுப்பார்கள். இதை வைத்து தான் அரசு இறுதி முடிவு எடுக்கும் என பாஸ்டியர் நிறுவன அதிகாரிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications