கருணாநிதியின் டெல்லி பயணம் திடீர் ரத்து
சென்னை: முதல்வர் கருணாநிதி இன்று டெல்லி செல்லவிருந்தது திடீரென ரத்து செய்யப்பட்டு விட்டது.
மத்தியில், இடதுசாரிகளின் மிரட்டல் காரணமாக மத்திய அரசு கவிழும் அபாயம் முன்பு இருந்தது. இதையடுத்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கும், இடதுசாரிகளுக்கும் இடையே சமரசத்தை ஏற்படுத்த முதல்வர் கருணாநிதி முயன்று வந்தார்.
இதுதொடர்பாக கருணாநிதியை, பிரகாஷ் காரத் சென்னை வந்து சந்தித்துப் பேசினார். சோனியாவும், கருணாநிதியுடன் பேசினார். இருப்பினும் கருணாநிதியின் முயற்சிகள் பலிக்கவில்லை.
இதையடுத்து டெல்லி சென்று இரு தரப்பினருடனும் பேச அவர் திட்டமிட்டிருந்தார். இதற்கு வசதியாக டெல்லியில் இன்று நடைபெறும் முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் நூல் வெளியீட்டு விழாவில் அவர் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் டெல்லி அரசியல் நிலவரம் டோட்டலாக மாறி விட்டது. இடதுசாரிகள் ஆதரவை திரும்பப் பெற்று விட்டன. மாறாக, சமாஜ்வாடி கட்சியும், வேறு சில கட்சிகளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு ஆதரவு தர முன்வந்துள்ளன. இதனால் அரசுக்கு ஆபத்து நீங்கியுள்ளதாக கருதப்படுகிறது.
மத்திய நிலவரம் குறித்து 2 நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் கருணாநிதி, தான் டெல்லி செல்ல வேண்டிய அவசியம் இல்லாமல் போய் விட்டதாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்றைய முதல்வரின் டெல்லி பயணம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக.. அகற்றப்பட்ட கலைஞர் படம்.. கடும் எதிர்ப்பால் மீண்டும் வைக்கப்பட்டது! -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications