திமுகவுக்கு ஆதரவு வாபஸா?-தா. பாண்டியன்
சென்னை: அணுசக்தி ஒப்பந்தத்தை ஆதரிக்கும் திமுக அரசுக்கு ஆதரவு தரமாட்டோம் என்று நான் சொல்லவே இல்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் தி.மு.க. அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் தந்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்வது குறித்து பரிசீலிக்கப்படும் என தான் கூறியதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள பாண்டியன், தான் ஒருபோதும் அப்படி கருத்து எதுவும் கூறவில்லை என்று விளக்கம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தா.பாண்டியன் வெளியிட்ட அறிக்கையில்,
திருச்சியில் கடந்த 9ம் தேதி பத்திரிகை நிருபர்களைச் சந்தித்த போது, தமிழகத்தில் திமுக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தந்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்ள இருப்பதாகவும், இது பற்றி மத்திய நிர்வாகக் குழுவில் விவாதிக்கப்படும் என்றும் நான் கூறியதாக சில பத்திரிகைகளில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தலைப் பற்றியோ, கூட்டணியைப் பற்றியோ எந்த கருத்தையும் நான் வெளியிடவில்லை. கட்சியில் அத்தகைய விவாதமும் இல்லை. வரும் 12 (நாளை), 13ம் தேதிகளில் கூடுகிற மத்திய நிர்வாகக் குழு, அமெரிக்காவுடனான யுரேனிய ஒப்பந்தம் குறித்து எழுந்துள்ள அரசியல் பிரச்னைகளைப் பற்றி விவாதிப்பதற்காக கூடுகிறது; தேர்தல் கூட்டணி பற்றி விவாதிப்பதற்காக இல்லை.
கட்சித் தோழர்கள், தேர்தல் கூட்டணி குறித்து எவ்வித கருத்தையும் வெளியிட வேண்டாம், என்று பாண்டியன் கூறியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications