நம்பிக்கை வாக்கெடுப்பு: எல்ஜி, செஞ்சிக்கு மதிமுக எச்சரிக்கை!
கோவை: நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது கட்சி கட்டுப்பாட்டை மீறினால் எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோரின் எம்.பி. பதவி பறிக்கப்படும் என அக் கட்சியின் நாடாளுமன்ற கொறாடா பொள்ளாச்சி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கோவையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், அணுசக்தி ஒப்பந்தத்திற்கு ஆதரவு அளிக்க மாட்டோம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ முன்பே அறிவித்து விட்டார்.
எனவே நாடாளுமன்றத்தில் நடக்கும் வாக்கெடுப்பின் போது அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை மதிமுக எடுக்கும். கட்சி முடிவுப்படி நாங்கள் வாக்களிப்போம்.
வைகோ தலைமையிலான மதிமுக தான் உண்மையானது என்று தேர்தல் கமிஷன் கூறியுள்ளது. எங்கள் கட்சியின் பம்பரம் சின்னத்தில் நின்று போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் எல். கணேசனும், செஞ்சி ராமசந்திரனும்.
இதனால் இவர்கள் நாடாளுமன்றத்தில் நடக்கும் வாக்கெடுப்பின் போது மதிமுக கொறாடா எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு வாக்களிக்க வேண்டும். இல்லையெனில் அவர்களின் பதவி பறிபோகும் நிலை உருவாகும் என்றார்.
-
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications