ஆதரவு வாபஸ் ஏன்? இடதுசாரிகளின் விளக்க பிரசாரம் தொடக்கம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், புரட்சிகர சோசலிச கட்சி மற்றும் அகில இந்திய பார்வர்ட் பிளாக் ஆகியவை இணைந்து இந்த விளக்கப் பிரசாரத்தை தொடங்கியுள்ளன.
நிகழ்ச்சியில் பேசிய மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத், அணு ஒப்பந்தத்தின் மீதே அதிக கவனம் செலுத்தி வரும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மறந்து விட்டது.
விலைவாசி கட்டுப்படுத்தப்படவில்லை. பண வீக்கம் கட்டுப்படுத்தப்படவில்லை. தேசியநலனை கருத்தில் கொள்ளாமல், பொது குறைந்தபட்ச திட்டத்தை கண்டு கொள்ளாமல் நடந்து வருகிறது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு.
பண வீக்கத்தை கட்டுப்படுத்த இடதுசாரிகள் கூறிய ஆலோசனைகளையும், யோசனைகளையும் மத்திய அரசு முற்றாக நிராகரித்து விட்டது. அதேபோல விலைவாசி உயர்விலும் இடதுசாரிகளின் யோசனைகளையும், கோரிக்கைகளையும் மத்திய அரசு ஏற்கவில்லை.
அமெரிக்க ஆதரவு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் தோல்விகள், தவறுகள், மக்கள் விரோத கொள்கைகளை மக்களிடம் வெளிப்படுத்தும் வகையில், இன்ன காரணத்திற்காகத்தான் எங்களது ஆதரவு திரும்பப் பெறப்பட்டது என்பதை விளக்கும் முகமாகவும் இந்த விளக்கப் பிரசாரம் தொடங்கியுள்ளது.
காங்கிரஸ் மற்றும் பாஜகவுடன் அணி சேராத, பிற ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகளையும் எங்களுடன் அணி திரட்ட முயன்று வருகிறோம்.
காங்கிரஸ், பாஜக அல்லாத அணிதான் சரியான மாற்றாக இருக்க முடியும். அதைத்தான் மக்களும் விரும்புகிறார்கள்.
அரசு தற்போது கடைப்பிடித்து வரும் பொருளாதார கொள்கைகள், விவசாயிகளுக்கு எதிரானது, கிராமப்புற மக்களுக்கு எதிரானது, தொழிலாளர்களுக்கு விரோதமானது, நலிவடைந்த பிற பிரிவினருக்கு விரோதமானது. இதை மக்களிடம் எடுத்துச் சொல்வோம்.
அமெரிக்க அதிபர் புஷ்ஷுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவே காங்கிரஸ் அதிக ஆர்வம் காட்டுகிறது. அதுதான் காங்கிரஸுக்கு முதன்மையான பிரச்சினை. மற்றபடி விலைவாசி உயர்வு, பணவீக்கம் குறித்து அவர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை என்றார்.
--
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications