மீனவர் பிரச்சினை: 17ம் தேதி திமுக உயர் மட்டக் குழு கூட்டம்

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொட்டதற்கெல்லாம் சுடுவதும், உயிரைப் பறிப்பதுமாக உள்ளனர். அவர்களின் கொலை வெறித் தாக்குதலில் சிக்கி நூற்றுக்கணக்கான மீனவர்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
ஆனால் இதுவரை ஒருமுறை கூட மத்திய அரசு இலங்கையை உறுதியான குரலில் எச்சரித்ததில்லை. இந்திய மீனவர்களை காக்க இதுவரை இந்திய கடற்படையும், கடலோரக் காவல் படையும் எந்த முயற்சியையும் மேற்கொண்டதாக வரலாறும் இல்லை.
இந்த அக்கிரம அவலம் குறித்து மாநில அரசு பலமுறை மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தும், செவிடன் காதில் ஊதிய சங்காகவே அது உள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் 2 நாகை மாவட்ட மீனவர்களை கொன்று குவித்தது இலங்கை கடற்படை. அத்தோடு நேற்றும் நாகை மீனவர்களை துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு எச்சரித்து விரட்டியடித்துள்ளது.
இலங்கை கடற்படையின் இந்த தொடர் தாக்குதல்களால் ராமநாதபுரம், நாகப்பட்டனம், புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் பெரும் அதிர்ச்சியும், கொதிப்பும் அடைந்துள்ளனர். ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 8 நாட்களாக காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாகை மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்ைத அறிவித்துள்ளனர்.
இலங்கை கடற்படையின் வெறிச் செயலை அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், தேமுதிக, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக கண்டித்துள்ளன.
இந்த நிலையில், திமுக உயர் மட்ட செயல் திட்டக் குழு கூட்டம் வருகிற 17ம் தேதி கூட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் விடுத்துள்ள அறிக்கையில், கடலில் வரையறுக்கப்பட்ட எல்லைக்கோட்டினைத் தாண்டி மீன் பிடித்திட வந்தார்கள் என்று சாக்கிட்டு, தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுட்டுக்கொல்கிற கொடுமை தொடர்ந்து நடந்திடுவதை உடனடியாக நிறுத்திடவும், தடுத்திடவும், இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழ் நாட்டளவில் எத்தகைய கண்டனத்தைத் தெரிவிப்பது என்பதை அறிவித்து அதனை நடைமுறைப்படுத்திட வருகிற 17ம் தேதி மாலை 5 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக உயர் மட்ட செயல் திட்டக் குழுவின் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
திமுகதலைவரும், முதல்வருமான கருணாநிதி தலைமையில் கூடி முடிவெடுக்க வேண்டியிருப்பதால் திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட உயர் மட்டக் குழு உறுப்பினர்கள் தவறாது வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
வழக்கமாக மிக மிக முக்கிய முடிவுகளை எடுப்பதற்காகவே திமுகவின் உயர் மட்ட செயல் திட்டக் குழுவை அக்கட்சி கூட்டுவது வழக்கம். சமீபத்தில் கூட பாமகவுடனான உறவை முறிக்கும் முடிவையும் இக்கூட்டம்தான் எடுத்தது. இந்த நிலையில் மீனவர் விவகாரம் தொடர்பாக கடுமையான முடிவை திமுக எடுக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
--
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications