காஞ்சிபுரம் அருகே பாமக கவுன்சிலர் வெட்டிப் படுகொலை
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே வில்லியம்பாக்கம் என்ற இடத்தில்,பாமக கவுன்சிலர் அடையாளம் தெரியாத கும்பலால் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டார்.
வில்லியம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராஜா என்கிற ஆசை ராஜா (36). இவர் அடிப்படையில் ஒரு ரவுடி. கொலை உள்ளிட்ட பல வழக்குகளில் இவர் சம்பந்தப்பட்டுள்ளார். வழக்குகள் நிலுவையில் உள்ளன.
ராஜாவுக்கு இரு மனைவிகள் உள்ளனர். சமீபத்தில்தான் தனது 2வது மனைவியை விட்டு விட்டு முதல் மனைவியுடன் வந்து வசிக்க ஆரம்பித்தார்.
இன்று காலை இவரும், மைத்துனர் சுரேஷும், வயலில்நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அடையாளம் தெரியாத ஒரு கும்பல் அவர்களை மறித்தது. பின்னர் ராஜாைவ சுற்றி வளைத்து அக்கும்பல் சரமாரியாக வெட்டியது.
ரத்த வெள்ளத்தில் மிதந்த ராஜா சம்பவ இடத்திலேயே பலியானார். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
கொலையாளிகளைப் பிடிக்க போலீஸார் தனிப்படை அமைத்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட ராஜா வில்லியம்பாக்கம் பஞ்சாயத்து பாமக கவுன்சிலராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications