இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள், எஸ்.பிக்கள் மாற்றம்
சென்னை: சென்னை மாநகர காவல்துறை இணை ஆணையர்கள் ரவி, துரைராஜ் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மாநகரில் வட சென்னை இணை ஆணையராக இருந்தவர் ரவி. இவரது நியமனத்திற்குப் பின்னர் வட சென்னையில் ரவுடிகளின் கொட்டம் வெகுவாக அடக்கப்பட்டது. சமீபத்தில் கூட ரவியின் நேரடி மேற்பார்வையில், ரவுடி பாபாசுரேஷ் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த நிலையில் திடீரென ரவுடி மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை நிர்வாகப் பிரிவு டிஐஜியாக ரவி நியமிக்கப்பட்டுள்ளார். ரவி இருந்த பொறுப்புக்கு லஞ்ச ஒழிப்பு துணை இயக்குநர் அபய் குமார் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல தென் சென்னை இணை ஆணையர் துரைராஜ், காஞ்சிபுரம் சரக டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார். துரைராஜுக்குப் பதில், ஏ.எம்.எஸ்.குணசீலன், புதிய இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் சரக டிஐஜி மாசானமுத்து, விழுப்புரத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
நெல்லை நகர குற்றப் பிரிவு போக்குவரத்து துணை ஆணையராக கல்பனா நாயக் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆவடி ரெஜிமன்ட் கமாண்டன்ட் மகேந்திர குமார் ரத்தோட், மணிமுத்தாறு விசேஷ போலீஸ் படை கமாண்டன்ட் ஆக மாற்றப்பட்டுள்ளார்.
இதுவரை மணிமுத்தாறு விசேஷ போலீஸ் படை கமாண்டன்ட் தமிழ்ச்சந்திரன் மதுரை அமலாக்கப் பிரிவு எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரை நகர குற்றப் பிரிவு துணை ஆணையர் கபில்குமார் சரத்கார் கன்னியாகுமரி எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி எஸ்.பி. சந்தோஷ்குமார் சென்னை (வடக்கு) போக்குவரத்து துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை வடக்கு போக்குவரத்து துணை ஆணையராக இருந்து வரும் லலிதாலட்சுமி கோவை மேற்கு மண்டல லஞ்சஒழிப்பு எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை லஞ்ச ஒழிப்பு எஸ்.பியாக உள்ள சமுத்திரப்பாண்டி, சிவில் சப்ளை சிஐடி பிரிவு கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications