இலங்கை தூதரகம் முன் சிபிஐ ஆர்பாட்டம்
சேலம்: தமிழ மீனவர்களை தாக்கும் இலங்கை கடற்படையை கண்டித்து அந்நாட்டுத் தூதரகம் முன்பு வரும் 30 ம் தேதி கண்டன ஆர்பாட்டம் நடத்தப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா. பாண்டியன் தெரிவித்துள்ளார்.
அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் மாநில மாநாடு மற்றும் அகில இந்திய சாலை போக்குவரத்து சம்மேளன மாநாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் துவக்க விழா நேற்று சேலத்தில் நடைபெற்றது.
அப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் தா.பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியாதவது:
தமிழக மீனவர்களை மட்டும் இன்றி இலங்கை வாழ் தமிழர்கள் மீது நடக்கும் தாக்குதலும் நிறுத்தப்பட வேண்டும்.
இந்திய குடி மகன் மீது தாக்குதல் நடத்துவது இந்தியாவுக்கே அவமானம். இதை வலியுறுத்தி வரும் 30 -ம் தேதி அன்று சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு கண்டன ஆர்பாட்டம் நடத்தப்படும் .
ஒசூரில் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு அரசு விளை நிலத்தை எடுக்க ஆணை பிறப்பித்துள்ளது. அதை கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. மேலும் அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து நாளை சாலை மறியல் நடத்தப்படும்.
கம்யூனிஸ்ட் கட்சியின் கடைசி தொண்டன் உயிர் உள்ளவரை பாஜகவுன் உறவு என்பது நடக்கவே நடக்காது.
அரசியல்வாதிகள், தொழிற்சங்கவாதிகளை பொடா, தடா, தேசிய பாதுகாப்பு சட்டம் போன்ற சட்டத்தில் கைது செய்வதை கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க்கின்றது.
பயங்கரவாதிகளை தவிர இந்த சட்டத்தில் மற்றவர்களை கைது செய்தவது நல்லது அல்ல, என்றார் பாண்டியன்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications