இந்தியாவும் சீனாவும் பூமியையே எரித்துவிடுவார்கள்!-கிளிண்டன்
வாஷிங்டன்: இன்று இந்த பூமியை அச்சுறுத்தும் மிகப்பெரிய ஆபத்து வளர்ந்து வரும் இந்தியாவும் சீனாவும்தான். இந்த இரு நாடுகளும் சுற்றுச்சூழலைக் கெடுப்பதை உடனே ஒரு கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். இல்லையேல் இவர்களால் உலகம் அழியப் போவது உறுதி, என்று கூறியுள்ளார் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளிண்டன்.
ஏபிசி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கிளிண்டன் கூறியிருப்பதாவது:
உலக சுற்றுச் சூழலை அச்சுறுத்தும் நச்சுக்களை வெளியிடுவதில் சீனாதான் இப்போது முதலிடத்தில் உள்ளது. அங்கே, 10 நாளைக்கொரு புதிய அனல் மின் நிலையங்கள் உருவாகி வருகின்றன.
இவை அனைத்தும் நிலக்கரியை எரிபொருளாகப் பயன்படுத்துபவை. அவர்கள் எந்தக் கட்டுப்பாட்டுக்குள்ளும் வருவதாகத் தெரியவில்லை.
ளரும் நாடுகளைப் பொருத்தவரை, வளர்ந்த நாடுகள் தங்களை இரண்டாம் நிலையில் அழுத்தி வைத்திருப்பதாக ஒரு உணர்வு நிலவுகிறது.
இந்தியாவும் அதே எண்ணத்தில்தான் செயல்படுகிறது. அதனால்தான் ஒருவித வெறியோடு, எதைப் பற்றியும் கவலைப்படாமல் தங்கள் வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதிலேயே குறியாக இருக்கிறார்கள்.
விரைவில் இந்த நாடுகள் தங்களை ஒரு கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் தங்கள் வளர்ச்சித் திட்டங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையேல், இந்தியா- சீனா ஆகிய இரு நாடுகளுமே போதும், இந்த பூமியை எரித்துவிட..., என்று கூறியுள்ளார் கிளிண்டன்.
சில தினங்களுக்கு முன்புதான், உலகிலேயே இந்தியர்கள்தான் அதிகம் சாப்பிடுவதாகவும் அதனால் உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடும் அபாயம் உள்ளதாகவும் இப்போதைய அமெரிக்க ஜனாதிபதி புஷ் கூறியது நினைவிருக்கலாம்.
-
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications