இந்தியர் வாழ்க்கை தரத்தை உயர்த்த மலேசிய அரசு நிதி ஒதுக்கீடு
கோலாலம்பூர்: மலேசியாவில் வறுமையில் தவிக்கும் இந்திய வம்சாவளியினர் மற்றும் இந்தியர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த 120 மில்லியன் ரிங்கிட் தொகையை- கிட்டத்தட்ட 160 கோடி ரூபாய்- மலேசிய அரசு அனுமதித்துள்ளது.
அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு தவணை முறையில் இந்தத் தொகை செலவழிக்கப்பட்டு, அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்த்தப்படும் என்று மலேசிய அரசு தெரிவித்துள்ளது.
இத் தகவலை, மலேசிய இந்திய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டத்தோ சாமிவேலு சமீபத்தில் அறிவித்துள்ளார்.
மலேசியாவில் மட்டும் 20 லட்சம் குடியுரிமை பெற்ற இந்தியர்கள் வசிக்கிறார்கள். சர்வதேச அளவில் மலேசியா ஒரு வளர்ந்த நாடாகப் பார்க்கப்பட்டாலும், அங்கு வாழும் இந்தியர்களின் நிலையில் மட்டும் எந்த முன்னேற்றமும் இல்லைமலிருந்தது.
இந்த வெறுப்புணர்வு காரணமாகவே, கடந்த ஆண்டு தேர்தல்களில் டத்தோ சாமிவேலு கட்சி படுதோல்வியைச் சந்தித்தது. அவரும் முதல்முறையாக தோல்வியைச் சந்தித்தார். மலேசியாவில் முதல் முறையாக ஒரு தொங்கு நாடாளுமன்றம் அமையவும் இதுதான் காரணமாயிற்று.
மலேசிய இந்தியர்களின் கோபத்தை உணர்ந்து, அவர்களின் அடிப்படை வாழ்க்கைத் தரத்தை உயர்த்த 300 மில்லியன் ரிங்கிட்டுகளை ஒதுக்குமாறு கேட்டுக் கொண்டது மலேசிய இந்திய காங்கிரஸ்.
அடுத்து வரும் ஆண்டுகளில் இந்தியர் நலன் காக்க மேலும் அதிகமாக நிதி ஒதுக்கப்படும் என்றும், இதற்காகவே, துணைப் பிரதமர் நஜப் துன் ரசாக் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட உள்ளதாகவும் சாமிவேலு கூறினார். மலேசிய இந்தியர்களின் பிரச்சினைகளை உடனுக்குடன் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க இக்குழு வழிவகை செய்யும்.
இதற்கிடையே, இந்தியர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வசதிகளையும் சிறப்பான முறையில் நிறைவேற்றித் தருவோம் என மலேசிய பிரதமர் அப்துல்லா படாவி தெரிவித்துள்ளார்.
கோலாலம்பூருக்கு வெளியே அமைந்துள்ள மலேசியாவின் புதிய தலைநகரான பட்ருங்ஜயாவில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த காலத் தவறுகளிலிருந்து நிறைய கற்றுக் கொண்டோம். இனி மலேசியாவில் அனைத்து இனங்களுக்கும் சமமான வாய்ப்புகள் வழங்கப்படும். அதை எனது தலைமையிலான அரசு இப்போதே உறுதி செய்கிறது.
நாட்டின் புதிய பொருளாதாரக் கொள்கையும் அதற்கேற்ற வகையில்தான் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அனைத்துப் பிரிவினருக்கும் சமமான வளர்ச்சி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்திவிட்டு வரும் 2010-ம் ஆண்டில் நான் அரசியலிலிருந்து விலகிவிடுவேன், என்றும் படாவி கூறியுள்ளார்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications