அணு ஒப்பந்தத்துக்கு பாஜக இளம் எம்பிக்கள் ஆதரவு?
டெல்லி: காங்கிரஸ் எம்பிக்களை பாஜக வளைத்து வரும் நிலையில் பாஜகவைச் சேர்ந்த சில எம்பிக்களை இழுக்க காங்கிரசும் உள்ளடி வேலைகளில் இறங்கியுள்ளது.
மூத்த காங்கிரஸ் தலைவரான ஆர்.கே. தவான் தலைமையிலான டீம் , பாஜகவில் அதிருப்தியில் உள்ள எம்பிக்களை பட்டியலிட்டுக் கொண்டு அவர்களை அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க வைக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளது.
மேலும் ராகுல் காந்தியும் பாஜக உள்ளிட்ட எதிர்க் கட்சிகளில் உள்ள இளம எம்பிக்களுடன் பேசி அரசுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.
இதற்கு வெற்றியும் கிடைத்துள்ளதாகத் தெரிகிறது. சில பாஜக எம்பிக்கள் அரசை ஆதரிக்க தயாராக உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந் நிலையில் அமேதியில் நிருபர்களிடம் பேசிய ராகுல்,
அணுசக்தி ஒப்பந்தம் நாட்டுக்கு நன்மை தரக்கூடியது. அதை அமல்படுத்த முடிவு செய்த பிரதமர் மன்மோகன் சிங்கின் துணிச்சலை பாராட்டுகிறேன். இந்த ஒப்பந்தத்துக்காக எத்தனை முறை வேண்டுமானாலும் ரிஸ்க் எடுக்க காங்கிரஸ் தயார்.
அவருக்கு எனது முழு ஆதரவு உண்டு. இந்தியாவின் எதிர்கால எரிசக்தி மற்றும் அணுசக்தி துறைக்கு இந்த ஒப்பந்தம் அவசியம். உலகின் பெரிய நாடாக இந்தியா உருவாவதற்கு இந்த ஒப்பந்தம் தேவை.
எதிர்க்கட்சிகளில் உள்ள பல இளம் எம்.பிக்களுடனும் பேசினேன். அவர்களும் இந்த ஒப்பந்தத்துக்கு ஆதரவு தருகின்றனர்.
என் தந்தை கம்ப்யூட்டர் புரட்சியை ஏற்படுத்தினார். அப்போதும் இதுபோன்ற எதிர்ப்பு கிளம்பியது. கம்ப்யூட்டரால் விவசாயிகளுக்கு என்ன பயன் என கேட்டனர். ஆனால் இப்போது அதனால் ஏற்பட்டுள்ள மாற்றங்களை பார்க்கிறோம்.
அது போலவே அணு சக்தி ஒப்பந்ததாலும் நாட்டில் பெரும் புரட்சி ஏற்படும்.தற்போது 3 சதவீதம் மட்டுமே அணுசக்தி மூலமாக மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இது 70 சதவீதமாக மாறும் என்றார் ராகுல்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications