அறுந்த மின்கம்பி: ரயில்கள் தாமதம்-மக்கள் அவதி
விழுப்புரம்: விழுப்புரம் அருகே உயர் அழுத்த மின்சார கம்பிகள் அறுந்து சரக்கு ரயில் மீது விழுந்தது. இதனால் ரயில் மற்றும் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விழுப்புரத்தில் இருந்து விருத்தாசலம் அருகே உள்ள ஈச்சங்காட்டிற்கு நிலக்கரி ஏற்றிய சரக்கு ரயில் நேற்று சென்றது. ஜானகிபுரம் ரயில்வே கேட் அருகே சென்று கொண்டிருந்தபோது, தொங்கிய நிலையில் இருந்த உயர் மின் அழுத்த கம்பியை தொட்டது. இதனால் தீப்பொறிகளுடன் அறுந்த மின்கம்பி, சரக்கு ரயில் மீது விழுந்தது.
இதை பார்த்த ரயில் டிரைவர் திருமுருகன், உடனடியாக ரயிலை நிறுத்திவிட்டு தப்பினார். உயர் அதிகாரிகளுக்கும் அவர் தகவல் தெரிவித்தார். இதையடுத்து விழுப்புரம் ரயில் நிலைய மேலாளர், ரயில்வே உயர் அதிகாரிகள் மற்றும் மின்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அசம்பாவிதங்களை தவிர்க்க அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, அந்த பாதையில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த அனந்தபுரி எக்ஸ்பிரஸ், ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் கண்டம்பாக்கம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டன. சேது எக்ஸ்பிரஸ் ரயிலும் நிறுத்தப்பட்டது.
அனந்தபுரி எக்ஸ்பிரஸில் பயணம் செய்த பாஜக தலைவர் இல.கணேசன் உள்பட பயணிகளும் பெரும் பாதிப்புக்குள்ளாகியினர். சரக்கு ரயில் வருவதன் காரணமாக ஜானகிபுரம் ரயில்வே கேட் ஏற்கனவே மூடப்பட்டது. சம்பவத்தை தொடர்ந்து சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட தூரம் பஸ் உள்ளிட்ட வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
உடனடியாக அங்கு விரைந்த விழுப்புரம் மாவட்ட எஸ்பி அமல்ராஜ், டிஎஸ்பி தட்சிணாமூர்த்தி தலைமையிலான போலீசார் விரைந்து சென்று போக்குவரத்தை மாற்றுப் பாதையில் திருப்பி விட்டனர்.
அறுந்த விழுந்த கம்பியை அகற்ற சுமார் 3 மணி நேரமானது. அதன் பின்னர் நடுவழியில் நிறுத்தப்பட்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஒவ்வொன்றாக புறப்பட்டன. ஜானகிபுரம் கேட்டும் திறக்கப்பட்டு சாலை போக்குவரத்து தொடங்கியது.
சென்னையில் நடைபெறும் என்ஜினீயரிங் கவுன்சிலிங்கில் கலந்து கொள்வதற்காக கன்னியாகுமரி, நெல்லை, மதுரை பகுதிகளைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த ரயில்களில் வந்தனர். இந்த சம்பவத்தால் குறித்த நேரத்தில் கவுன்சிலிங்கிற்கு செல்ல முடியாமல் மாணவர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகினர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications