சட்டவிரோத குடியேற்றம் - பிரிட்டனை அச்சுறுத்தும் பஞ்சாபிகள்!
லண்டன்: சட்டவிரோதமாக பாஸ்போர்ட் மற்றும் குடியுரிமை ஆவணங்களைத் தயார் செய்து பிரிட்டனுக்குள் அதிக பஞ்சாபியர்களைக் குடியமர்த்தும் இந்தியர்களையும் அவர்கள் நெட்வொர்க்கையும் கையும் களவுமாக வெளிப்படுத்தியுள்ளது பிபிசி நிறுவனம்.
லண்டனின் புறநகர் பகுதியான சவுத்ஹாலில் ஏராளமான இந்தியர்கள் குறிப்பாக பஞ்சாபிகள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் போலி பாஸ்போர்ட்டுகள் மற்றும் விசா மூலம் உள்ள நுழைந்தவர்கள் என குற்றம்சாட்டப்பட்டு வந்தது.
இந்த போலி ஆவணங்களைத் தயாரித்துக் கொடுப்பதே பஞ்சாபைச் சேர்ந்த சில இளைஞர்கள்தான் என்ற உண்மையை பிபிசி நிறுவனம் இப்போது தனது அதிரடி புலனாய்வு மூலம் (ஸ்டிங் ஆபரேஷன்) மூலம் அம்பலப்படுபத்தியுள்ளது.
சவுத்ஹால் பகுதியில் ஒரு மைல் சுற்றளவில் உள்ள சுமார் 40க்கும் மேற்பட்ட வீடுகளில் குடியிருப்போர் முழுக்க முழுக்க போலி ஆவணங்களைக் காட்டி பிரிட்டனுக்குள் நுழைந்தவர்கள்தானாம். இவர்கள் எல்லாருமே இந்தியர்கள், அதுவும் பஞ்சாபிகள்.
லண்டன் மட்டுமல்ல, பிரிட்டனின் பெரும்பாலான பகுதிகளில் வசிக்கும் பஞ்சாபி இளைஞர்கள் பலரும் சட்ட விரோதமாத்தான் குடியுரிமை பெற்றுள்ளனர். சட்டவிரோதமாக இங்கு நுழையும் பஞ்சாபி, மேலும் 100 பஞ்சாபிகளை இதே பாணியில் உள்ளே கொண்டுவந்து விடுகிறாராம்.
இதற்கான தண்டனை எவ்வளவு கடுமையானது என்பது தெரிந்தே இருந்தாலும், அதுகுறித்து கவலைப்படாமல், சட்டத்தில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி எப்படி தப்பிக்கலாம் என்பதையே தங்களைச் சுற்றியுள்ள அனைவருக்கும் சொல்லித் தருகிறார்கள், என்கிறது பிபிசி அறிக்கை.
பிபிசியின் புலனாய்வு நிருபர்கள் சிலர் சவுத்ஹாலைச் சேர்ந்த விக்கி என்ற நபரிடம் தங்களுக்கும் இந்தமாதிரி போலி ஆவணங்கள் வேண்டும் என்று கேட்டுள்ளனர். அப்போது விக்கி தன்னிடம் உள்ள சில போலி ஆவணங்களைக் காட்டி எது போல வேண்டும் என கேட்டுள்ளார்.
இப்படி ஆட்களை ஒருநாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்குக் கடத்திப் போய் வேலைக்குச் சேர்த்துவிடுவதசையே மெயின் தொழிலாக்க் கொண்டு இயஙஅகும் பெரிய நெட்வொர்க்கையே இந்த ஆபரேஷனிலே பிபிசி வெளிப்படுத்தியுள்ளது.
இந்த மாதிரி திருடப்பட்ட அல்லது போலி ஆவணங்கள் மூலம், ஷெஃபீல்டு, கோவென்டிரி, பிராட்போர்டு பகுதிகளில் எவ்வளவு இந்தியர்கள் தன்னால் குடியமர்த்தப்பட்டார்கள் என்பதையும் கக்கியுள்ளார் விக்கி. இதை ரகசிய கேமரா மூலம் படம் பிடித்துள்ளனர் பிபிசிகாரர்கள்.
சட்ட விரோதமாக இங்கிலாந்துக்குள் வரும் இவர்களுக்கு ஃபாஜிகள் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இவர்கள் ஒரு நாளைக்கு 12 நேரம் வேலை செய்கிறார்கள், வாரத்தில் 6 நாட்கள் வேலை செய்து 150 பவுண்டுகள் (ரூ.12855) மட்டுமே கூலி பெறுகிறார்கள்.
அந்நாட்டு குறைந்த பட்ச கூலி சட்டப்படி இது மிகவும் குறைவான தொகை. இந்த குறைந்த தொகையை தருவதும் குற்றம், அதற்கு ஒப்புக் கொள்வதும் குற்றம். லண்டன் மாநகரின் குறைந்தபட்ச கூலி விகிதம் ஒரு மணிநேரத்துக்கு ரூ.638 ரூபாய் (7.45 பவுண்டுகள்) என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்தில் வசிக்கும் பல பஞ்சாபிகள், இவ்வளவு அதிக கூலி கொடுத்து தங்கள் தொழிலகங்களிலும் பண்ணைகளிலும் ஆட்களை வேலைக்கு வைத்துக் கொள்வதற்கு பதில், குறைந்த கூலிக்கு தங்கள் ஊரிலிருந்தே ஆட்களை சட்டவிரோதமாகக் கொண்டு வருகின்றனர். இவர்களை தங்களுக்கு அருகில் உள்ள, தெரிந்த மற்ற வெள்ளைக்காரர்களிடமும் சேர்த்து விடுகின்றனர்.
ஒரு சதுர மைல் பரப்பளவுக்குள்ளேயே இவ்வளவு சட்ட விரோத குடியேறிகள் இருக்கும்போது, பிரிட்டன் முழுவதும் கணக்கெடுத்தால், நிலைமையின் தீவிரம் புரிந்துவிடும் என்கிறது பிபிசி.
இதே போன்றதொரு வழக்கில் சமீபத்தில் பஞ்சாபி பாடகர் தலேர் மெஹந்தி கைது செய்யப்பட்டது நினைவிருக்கலாம்!
-
இந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? இந்தியாவில் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
ஒரே நாளில் துடைத்தெறியப்பட்ட ரூ.10 லட்சம் கோடி.. "எல்லாம் போச்சு.." கதறும் முதலீட்டாளர்கள் -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்?












Click it and Unblock the Notifications