அரியலூரில் 20 வன்னியர் சமூக போலீஸார் இடமாற்றம்: டிஜிபியிடம் பாமக புகார்
சென்னை: அரியலூரில் வன்னிய சமூகத்தைச் சேர்ந்த 2 சப் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 20 போலீஸார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என டிஜிபி ஜெயினிடம் பாமக சார்பில் புகார் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னையில் டிஜிபி ஜெயினை, பாமக தலைவர் ஜி.கே.மணி நேரில் சந்தித்து மனு ஒன்றைக் கொடுத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், காடுவெட்டி குரு கைது செய்யப்பட்ட பின்னர் அரியலூரில் 2 சப் இன்ஸ்பெக்டர்கள் உள்பட வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த 20 போலீஸார் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து உரியநடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை மீண்டும் பழைய பணியிடத்திலேயே நியமிக்க வேண்டும் என டிஜிபியிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.
குரு கைதைத் தொடர்ந்து அரசியல்காழ்ப்புணர்ச்சி காரணமாக வன்னியர் சங்க நிர்வாகிகளை துரத்தி துரத்தி போலீஸார் கைது செய்து வருகின்றனர். அவர்கள் பதிவு செய்யும் முதல்தகவல் அறிக்கையில் மற்றும் பலர் என சேர்த்துக் கொள்கின்றனர். இதன் மூலம் கணக்கில் அடங்காத அளவுக்கு பலரையும் கைது செய்து வருகின்றனர்.
கடந்த 2 வாரங்களாக வன்னியர் சங்க நிர்வாகிகளும், பிரமுகர்களும் ஓடி ஒளியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் டிஜிபியிடம் கோரியுள்ளோம் என்றார்.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications