இலங்கையைக் கண்டித்து தமிழகம், புதுவையில், திமுக உண்ணாவிரதம்

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதைக் கண்டித்தும், இதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், கச்சத்தீவில் தமிழகத்தின் உரிமைகளை நிலை நாட்டக்கோரியும் தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த திமுக உயர் மட்ட செயல் திட்டக் குழுக் கூட்டம் முடிவு செய்தது.
அதன்படி இன்று காலை 8 மணிக்கு தமிழகம் முழுவதும் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது.
கருணாநிதி தொடங்கி வைத்தார்
சென்னை சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை எதிரே தொடங்கிய உண்ணாவிரதத்தை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார். அமைச்சர் ஆற்காடு வீராசாமி தலைமையில், உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது. மாலை 5 மணிக்கு அமைச்சர் அன்பழகன் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.
உண்ணாவிரதத்ைத தொடங்கி வைத்து முதல்வர் கருணாநிதி பேசுகையில், இலங்கைக்கு 1974ம் ஆண்டு கொடுக்கப்பட்ட கச்சத்தீவை மீண்டும் திரும்பப் பெற வேண்டும். அப்போதுதான் முடிவில்லாமல் நீண்டு வரும் இப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும்.
கச்சத்தீவை திரும்பப் பெற மத்திய அரசை கட்சி மாச்சரியமின்றி,அனைத்து கட்சிகளும் இணைந்து மத்திய அரசை நிர்ப்பந்திக்க வேண்டும். இந்த விஷயத்தில் அரசியல் தலைவர்கள் அனைவரும் தங்களது கருத்து வேறுபாடுகளை மறந்து விட்டு ஒன்றிணைந்து போராட வேண்டும்.
கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்ததுதான் தற்போது வினையாகி விட்டது. அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அதுவே மூலகாரணமாகும். கடலுக்கு தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கப் போகும் போதெல்லாம் சுடப்படுகிறார்கள்.
இதை கண்டித்து உலகெங்கும் உள்ள தமிழர்கள் ஒருமித்த குரலில் தங்களது எதிர்ப்பை உரக்க எழுப்ப வேண்டும். ஒற்றுமையுடன் குரல் கொடுத்தால்தான் வெற்றி கிடைக்கும்.
கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்கும் முடிவை மத்திய அரசு எடுத்த பின்னர் 1974ம் ஆண்டு ஜூன் 29ம் தேதி நான் அனைத்துக் கட்சிக் கூட்டத்ைதக்கூட்டி விவாதித்ேதன். அப்போதைய பிரதமர் இந்திராகாந்திக்கு, கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்ததைக கண்டித்து கடிதமும் எழுதினேன்.
ஆனால் கடந்த பல வருடங்களாக இலங்கை படையினரால், தமிழக மீனவர்கள் தொடர்ந்து இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து இலங்கை அரசு கவலையே படுவதில்லை. நாம் எதிர்ப்பு தெரிவிக்கும்போதெல்லாம் அதுகுறித்து கண்டு கொள்வதே இல்லை.
இந்தப் பிரச்சினை குறித்து மத்திய அரசிடம் நாம் சொல்வதும், அதற்குப் பலன்கள் இல்லாமல் போவதும் வழக்கமாகி விட்டது.
கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் இயற்கை சீற்றத்தால் உயிரிழந்தால் அது நியாயமான விஷயம். ஆனால் கடலுக்கு செல்லும் மீனவர்கள் இலங்கை படையினரால் படுகொலை செய்யப்படுவதை எந்தக் காரணத்தைக் கொண்டும் ஏற்கவே முடியாது என்றார் கருணாநிதி.
மதுரையில், மு.க.அழகிரியின் மகள் கயல்விழி, வேலுச்சாமி, மேயர் தேன்மொழி கோபிநாதன் ஆகியோர் தலைமையில் உண்ணாவிரதம் நடைபெற்றது.
ராமேஸ்வரத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் அமைச்சர்கள் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். உண்ணாவிரதம் நடைபெறும் இடங்களில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
புதுச்சேரியிலும் ...
புதுச்சேரியிலும் திமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி கடற்கரை சாலை, நேருசிலை முன்பு உண்ணாவிரதம் நடந்தது.
மாநில ஒருங்கிணைப்பாளர் ஆர்.வி. ஜானகிராமன் தலைமையில் எம்.எல்.ஏக்கள், முன்னாள் எம்.எல்.ஏக்கள், முன்னாள் எம்.பி, கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பெருமளவில் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications