3வது அணியில் இணைந்தார் கௌடா-காங்.க்கு பலத்த அடி
{image-deve gowda250_20072008.jpg tamil.oneindia.com}டெல்லி: நம்பிக்கை வாக்கெடுப்பில் மன்மோகன் சிங் தலைமையிலான அரசை தோற்கடிப்பதற்கான வியூகம் குறித்து 3வது அணி மற்றும் இடது சாரி தலைவர்கள் இன்று ஆலோசனை நடத்தினர். இதில், மாயாவதியும், மதச்சார்பற்ற ஜனதாதள தலைவரும், முன்னாள் கர்நாடக முதல்வருமான குமாரசாமியும் கலந்து கொண்டனர். இதுவரை காங்கிரசுக்கு ஆதரவாக இருந்து வந்த தேவெ கவுடா, 3வது அணியில் இணைந்துள்ளார்.
டெல்லி அரசியல் வட்டாரத்தில் புதிய திருப்பங்கள் அடுத்தடுத்து அரங்கேறி வருகிறது. ஆரம்பத்தில் அரசை தோற்கடிப்பதற்கான முயற்சிகளே சூடு பிடித்திருந்தன. தற்போது அடுத்த பிரதமர் குறித்து எதிர் அணியினர் தீவிரமாக விவாதிக்க ஆரம்பித்துள்ளனர். மாயாவதியை அடுத்த பிரதமர் என்று இடதுசாரி தலைவர்களும், தெலுங்குதேசம், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்திக் கூற ஆரம்பித்துள்ளனர்.
இதற்கு பரவலாக வரவேற்பு கிடைத்து வருகிறது. மாயாவதிக்கு ஆதரவாக சமாஜ்வாடி கட்சி உடைய ஆரம்பித்துள்ளது. இதுவரை நான்கு எம்.பிக்கள் பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துள்ளனர். நேற்று முக்கிய திருப்பமாக சமாஜ்வாடியின் பொதுச் செயலாளர் ஷாஹித் சித்திக்கி கட்சியிலிருந்து விலகி மாயாவதி முன்னிலையில் பகுஜன் சமாஜ் கட்சியில் சேருவதாக அறிவித்தார்.
இந்தநிலையில் மாயாவதியை அடுத்த பிரதமராக்குவது குறித்து முக்கிய முடிவு எடுக்கவும், மன்மோகன் சிங் அரசை எப்படி தோற்கடிப்பது என்ற வியூகத்தை இறுதி செய்யவும், இடதுசாரிகள், பகுஜன் சமாஜ், 3வதுஅணி தலைவர்களின் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பிரகாஷ் காரத், சீத்தாராம் எச்சூரி, பரதன், டி.ராஜா, பிஸ்வாஸ் உள்ளிட்ட இடதுசாரி தலைவர்கள், சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட 3வது அணி தலைவர்கள், மாயாவதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
3வது அணியில் கெளடா
ஆச்சரிய வருகையாக குமாரசாமியும் இக்கூட்டத்திற்கு வந்திருந்தார். முன்னதாக தேவே கெளடா நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார். சந்திப்பின்போது ஏற்கனவே தான் கூறியிருந்த நிபந்தனைகள் குறித்து பிரதமருடன் அவர் விவாதித்ததாக கூறப்பட்டது.
மகன் குமாரசாமிக்கு மத்திய அமைச்சர் பதவி, பெல்லாரியில் பாஜகவினர் வசம் உள்ள குவாரிகளை நாட்டுடமையாக்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை கெளடா வைத்திருந்தார்.
சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சுமூகமான சந்திப்பாக இருந்தது. பேரம் பேச வரவில்லை. தீர்மானத்தை ஆதரிப்பதா, எதிர்ப்பதா என்பது குறித்து ஞாயிற்றுக்கிழமைதான் விவாதித்து முடிவெடுக்கவுள்ளோம்.
அரசியல் விவகாரக் குழுக் கூட்டத்தைக் கூட்டி விவாதித்து முடிவெடுத்து அறிவிப்போம் என்றார் கெளடா.
இருப்பினும் கவுடாவின் கோரிக்கைகளை காங்கிரஸ் ஏற்கவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து தனது நிலையை மாற்றிக் கொண்டுள்ளார்.
ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் பிரகாஷ் காரத் செய்தியாளர்களிடம் பேசுகையில், இடதுசாரிகள், பகுஜன் சமாஜ், 3வது அணி, மதசார்பற்ற ஜனதா தளம், ராஷ்ட்ரீய லோக்தளம் ஆகிய அனைவரும் இணைந்து நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசை வீழ்த்துவோம். எங்களது எம்.பிக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் உள்ளனர். இந்த அரசு போக வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்புக்கு பின்னர் அனைவரும் மீண்டும் கூடி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்போம்.
22ம் தேதி நடக்கும் வாக்கெடுப்பில் இந்த அரசு வீழ்வது உறுதி என்றனர்.
மாயாவதி கூறுகையில், பகுஜன் சமாஜ் கட்சியில் எந்தவித குழப்பமும் இல்லை. 17 எம்.பிக்களும் அரசை வீழ்த்த ஆர்வமாக உள்ளனர் என்றார்.
அரசுக்கு எதிராக 3வது அணி, இடதுசாரிகள், பகுஜன்சமாஜ் கட்சி திரண்டுள்ளதும், இந்த அணியில் கெளடா, அஜீத் சிங் உள்ளிட்டோர் இணைந்துள்ளதும் காங்கிரஸ் வட்டாரத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
நாயுடு தலைமையில் ஆலோசனை
முன்னதாக, முலாயம் சிங் தவிர்த்த 3வது அணியின் தலைவர்களான சந்திரபாபு நாயுடு, அஸ்ஸாம் கண பரிஷத் கட்சியின் பிருந்தாவன் கோஸ்வாமி, இந்திய தேசிய லோக் தள தலைவர் அஜய் செளதாலா, ஜார்க்கண்ட் தலைவர் பாபுலால் மராண்டி ஆகியோர் கூடி முதலில் ஆலோசனை நடத்தினர். இக்கட்சிகளின் எம்.பிக்களும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இக்கூட்டம் குறித்து சந்திரபாபு நாயுடுவுக்கு நெருங்கிய தலைவர் ஒருவர் கூறுகையில், தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து கூட்டத்தில் விவாதிப்போம். நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு தோற்றால், விரிவான 3வது அணியை அமைப்பது குறித்து ஆலோசிக்க உள்ளோம் என்றார்.
பின்னர் இடதுசாரி தலைவர்கள் மற்றும் மாயாவதியுடன் 3வது அணி தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.
பகுஜன் எம்.பிக்கள் ஆலோசனை
முன்னதாக பகுஜன் சமாஜ் கட்சி எம்.பிக்கள் இன்று டெல்லியில் கூடி முக்கிய ஆலோசனையை மேற்கொண்டனர். மாயாவதி வீட்டில் இந்த கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ள உமாகாந்த் யாதவும் பங்கேற்றார். இவர் சமாஜ்வாடி கட்சிக்குப் போகக் கூடும் என முன்பு வதந்திகள் கிளம்பின. ஆனால் கூட்டத்திற்கு வந்ததன் மூலம் அந்த வதந்தி ஒன்றுமில்லாமல் போய் விட்டது.
இக்கூட்டத்தில் மாயாவதி பிரதமராவதற்கு சட்டரீதியாக உள்ள தடைகள் குறித்தும், அதை தாண்டி வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.
அரசுக்கு எதிராக ஏ.ஜி.பி. ஓட்டு
இந்த நிலையில், 2 எம்.பிக்களைக் கொண்டுள்ள அஸ்ஸாம் கண பரிஷத் கட்சி நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக கொறடா உத்தரவு பிறப்பிப்பதில்லை என முடிவு செய்துள்ளது. அதேசமயம், அரசுக்கு எதிராக வாக்களிக்க அது தீர்மானித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் பிருந்தாவன் கோஸ்வாமி கூறுகையில், நாங்கள் கொறடா உத்தரவு பிறப்பிக்கவில்லை. இருப்பினும் எங்களது எம்.பிக்களான அருண் சர்மாவும், சர்பானந்தா சோனாவாலும் அரசுக்கு எதிராக வாக்களிப்பார்கள்.
தெலுங்கு தேசம் மற்றும் 3வது அணியின் இதர கட்சிகளின் தலைவர்களுடன் நாங்கள் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம். இந்த அரசு போக வேண்டும். நாட்டு நலனுக்காக காங்கிரஸால் எதுவும் செய்ய முடியாது.
மிஸோராம் தேசிய முன்னணி மற்றும் நாகாலாந்து மக்கள் முன்னணி (இருவருக்கும் தலா ஒரு எம்.பி உள்ளனர்) ஆகிய கட்சிகளுக்கு எங்களது அணியில் சேர்க்க முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்.
விரைவில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மாற்றாக புதிய, பலமான ஒரு அணி உருவாகும் என்றார் அவர்.
-
மக்களே கவலை வேண்டாம்.. கேஸ் சிலிண்டர் சப்ளை சீராகிவிட்டதாம்.. அடித்து சொல்லும் மத்திய அரசு -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்!












Click it and Unblock the Notifications