இடதுசாரிகள் - பகுஜன் - 3வது அணி இன்று முக்கிய ஆலோசனை

டெல்லி அரசியல் வட்டாரத்தில் புதிய திருப்பங்கள் அடுத்தடுத்து அரங்கேறி வருகிறது.ஆரம்பத்தில் அரசை தோற்கடிப்பதற்கான முயற்சிகளே சூடு பிடித்திருந்தன. தற்போது அடுத்த பிரதமர் குறித்து எதிர் அணியினர் தீவிரமாக விவாதிக்க ஆரம்பித்துள்ளனர். மாயாவதியை அடுத்த பிரதமர் என்று இடதுசாரி தலைவர்களும், தெலுங்குதேசம், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்திக் கூற ஆரம்பித்துள்ளனர்.
இதற்கு பரவலாக வரவேற்பு கிடைத்து வருகிறது. மாயாவதிக்கு ஆதரவாக சமாஜ்வாடி கட்சி உடைய ஆரம்பித்துள்ளது. இதுவரை நான்கு எம்.பிக்கள் பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துள்ளனர். நேற்று முக்கிய திருப்பமாக சமாஜ்வாடியின் பொதுச் செயலாளர் ஷாஹித் சித்திக்கி கட்சியிலிருந்து விலகி மாயாவதி முன்னிைலயில் பகுஜன்சமாஜ்கட்சியில் சேருவதாக அறிவித்தார்.
இந்தநிலையில் மாயாவதியை அடுத்த பிரதமராக்குவது குறித்து முக்கிய முடிவு எடுக்கவும், மன்மோகன் சிங் அரசை எப்படி தோற்கடிப்பது என்ற வியூகத்தை இறுதி செய்யவும், இடதுசாரிகள், பகுஜன் சமாஜ், 3வதுஅணி தலைவர்களின் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
மாயாவதி தலைமையில் இடதுசாரிகள், 3வது அணியினர் இணைந்து மெகா 3வது அணியை அமைக்க தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.
அரசுக்கு இதுவரை ஆதரவாக இருந்து வந்த தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தற்போது 3வது அணிக்கு திரும்பியுள்ளது. இக்கட்சிக்கு 3எம்.பிக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அக்கட்சியின் தலைவர் சந்திரசேகர் ராவ் டெல்லியில் முகாமிட்டு மாயாவதிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். அதேபோல சந்திரபாபு நாயுடுவும் டெல்லியில் முகாமிட்டு மாயாவதிக்கு ஆதரவாக கட்சிகளைத் திரட்டி வருகிறார்.
3வது அணி, இடதுசாரிகள், பகுஜன் சமாஜ் கட்சிகளின் இந்த அதி வேக செயல்பாடுகள், ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications