மாயாவதியால் பிரதமராக முடியாது: லாலு
டெல்லி: மாயாவதி பிரதமர் பதவிக்கு வரநினைக்கிறார். ஆனால் அது நடக்காது என்று ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.
ராஷ்ட்ரீய ஜனதாதளத்தின் நாடாளுமன்றக் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இக்கூட்டத்துக்கு பின் நிருபர்களிடம் லாலு பேசுகையில், நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்பதற்காக எம்பிக்களுக்கு ரூ.25கோடி கொடுக்கப்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் பரதன் குற்றம் சாட்டியுள்ளார். அதை அவர் நிரூபிக்க வேண்டும். நிரூபிக்க முடியவில்லை என்றால் மன்னிப்புக் கேட்க வேண்டும்.
இந்த குற்றச்சாட்டின் மூலம் கட்சிகளின் மதிப்பையும், எம்பிக்களின் மதிப்பையும் பரதன் களங்கப்படுத்தியுள்ளார். இதற்காக நாடு அவரை மன்னிக்காது. இதன் மூலம் நாடாளுமன்ற ஜனநாயகத்தையே அவர் அவமதித்து விட்டார்.
ஜனநாயகத்தின் அஸ்திவாரத்தை தகர்ப்பதற்கான சதிதான் அவரது குற்றச்சாட்டு. அரசுக்கு 291 எம்பிக்களின் ஆதரவு உள்ளது. ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவும் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கும். ஒன்று, 2 எம்பிக்களை கொண்ட கட்சிகளுக்கு இது யோக காலம். இது அவர்களின் சீசன்.
அத்வானியும், மாயாவதியும் பிரதமராக ஆசைப்படுகின்றனர். எனக்கும் கூட பிரதமராக ஆசைதான். ஆனால் முடியுமா?. எனவே மாயாவதியால் பிரதமர் பதவிக்கு வர முடியாது என்றார் லாலு.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications