நேபாள அதிபர் தேர்தல்: யாருக்கும் பெரும்பான்மை இல்லை!
காத்மாண்டு: நேபாள அதிபர் தேர்தலில் போட்டியிட்ட எந்த கட்சி வேட்பாளருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருப்பினும் துணை அதிபராக பரமானந்த் ஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நேபாள நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 594. இதில் பிரசந்தா தலைமையிலான மாவோயிஸ்ட் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளது.
அடுத்த இடத்தில் நேபாள காங்கிரஸ் 110 இடங்களையும், யூஎம்எல் கட்சி 103 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.
இந்நிலையில் நேபாளத்தின் முதல் அதிபர் தேர்தல் நேற்று நடந்தது. மாவோயிஸ்ட் சார்பில் ராம்ராஜ் ராஜா பிரசாத் சிங்கும், நேபாள காங்கிரஸ் சார்பில் ராம் பரண் யாதவும் போட்டியிட்டனர். இதில் பெரும்பான்மை பெற 298 வாக்குகள் தேவை என்ற நிலை இருந்தது.
ஆனால் ராம் பரண் யாதவுக்கு 4 வாக்குகள் குறைவாக 294 வாக்குகளே கிடைத்தன. ராம்ராஜ் 284 வாக்குகள் பெற்றார். இதனால் யாருக்கும் பெரும்பான்மை வாக்குகள் கிடைத்தன.
முன்னதாக மாவோயிஸ்ட் வேட்பாளரை ஆதிரிப்பதாக 86 உறுப்பினர்களை கொண்ட மாதேஸி கட்சி வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சி மாற்றி ஓட்டுப் போட்டு விட்டது. இதனால் மாவோயிஸ்ட் வேட்பாளர் வெற்றி பெறமுடியாமல் போய் விட்டது. மேலும், யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இருப்பினும் பின்னர் நடைபெற்ற துணை அதிபர் தேர்தலில் மாதேஸி கட்சியைச் சேர்ந்த பரமானந்த ஜா தேர்ந்தெடுக்கப்பட்டார். நேபாள காங்கிரசும், யுஎம்எல் கட்சியும் ஆதரித்ததால் மாதேஸியின் வேட்பாளர் 312 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
நேபாள அரசியலில் அதிக இடங்களை பெற்று ஆட்சியைப் பிடித்துள்ள மாவோயிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற முடியாமல் போனதும், துணை ஜனாதிபதி தேர்தலில்தோல்வி கிடைத்துள்ளதும் நேபாள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications