நம்பிக்கை தீர்மானத்தை எதிர்த்து வாக்களிக்க சிவசேனா முடிவு
மும்பை: ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கொண்டு வரவுள்ள நம்பிக்கை தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்க 11 எம்.பிக்களைக் கொண்டுள்ள சிவசேனா கட்சி முடிவு செய்துள்ளதால், காங்கிரஸ் கூட்டணிக்கு மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிவசேனா, அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கும் என்ற கருத்து நிலவி வந்தது. ஆனால் தனது நிலை குறித்து சிவசேனா எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல்இருந்துவந்தது.
இந்த நிலையில் நேற்று மும்பையில் சிவசேனாவின் உயர்மட்டக் குழுக் கூட்டம் பால்தாக்கரே தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில், நம்பிக்கை தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்கவும், இதுதொடர்பாக ஞாயிற்றுக்கிழமை கொறடா உத்தரவு பிறப்பிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
மத்திய அரசு அனைத்து வகையிலும் தோல்வி அடைந்து விட்டது.எனவே நம்பிக்கை தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானிக்கப்படுவதாக பால்தாக்கரே தெரிவித்தார்.
இதையடுத்து காங்கிரஸ் கூட்டணிக்கு மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications