சோனியா காந்தியுடன் சிபு சோரன் ஆலோசனை
டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சிபு சோரன் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார். அப்போது அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க தனது கட்சி முடிவெடுத்திருப்பதாக சோனியாவிடம் சோரன் தெரிவித்தார்.
சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கு ஐந்து எம்.பிக்கள் உள்ளனர். இந்தநிலையில் சோனியா காந்தியை சிபுசோரன் இன்று காலை சந்தித்துப் பேசினார்.அவருடன், ஜார்க்கண்ட் மாநில முதல்வர் மது கோடா, துணை முதல்வர் சுதிர் மஹதோ உள்ளிட்டோரும் சென்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் சோரன் பேசுகையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். இந்த முடிவை சோனியா காந்தியிடம் தெரிவித்தேன்.
எனக்கு சோனியா காந்தி தரப்பில் என்ன உறுதிமொழி அளிக்கப்பட்டுள்ளது என்பதை நான் சொல்ல முடியாது என்றார்.
ஆனால் தனக்கு கேபினட் அமைச்சர் பதவியும், தனது கட்சிக்கு ஒரு இணை அமைச்சர் பதவியும் வழங்க வேண்டும் என சோரன் நிபந்தனை விதித்திருப்பதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications