நாங்களா மைனாரிட்டி?-பிரணாப் முகர்ஜி ஆவேசம்
டெல்லி: நாங்கள் மைனாரிட்டி அரசு அல்ல. பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை தக்க வைத்துக் கொள்வோம் என்று லோக்சபாவில் பிரணாப் முகர்ஜி கூறினார்.
மத்திய அரசு மீதான நம்பிக்கை தீர்மானத்தை பிரதமர் மன்மோகன்சிங் இன்று காலை தாக்கல் செய்தார்.
இதுதொடர்பான விவாதத்தின்போது வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி பேசுகையில், நாங்கள் 276 பேர் இருக்கிறோம். இதை மைனாரிட்டி என்று கூறமுடியாது. இடதுசாரிகள் ஆதரவை வாபஸ் பெற்ற போது கூட கட்சியில் 273 பேர் இருந்தோம். அப்போதும் மைனாரிட்டியாக இல்லை.
அணுசக்தி தொழில்நுட்பத்தில் கடந்த 30 ஆண்டுகளாக தனிமைப்படுத்தப்பட்டதை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தம்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் இந்த அரசு நிச்சயம் வெற்றி பெறும்.
அணு ஒப்பந்தம் தொடர்பான உண்மைகளை எதிர்கட்சி தலைவர் அத்வானி திரித்து கூறுகிறார். அரசின் ஸ்திரத்தன்மையை நாங்கள் கெடுக்கவில்லை. அதற்கு இடதுசாரிகள்தான் பொறுப்பேற்க வேண்டும்.
இடதுசாரிகள் வெளியேறியபோது சமாஜ்வாடி ஆதரவு தெரிவித்தது. சமாஜ்வாடி கட்சியின் 39 எம்பிக்களுடன் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பலம் இப்போது 276 ஆக உள்ளது. நாட்டின் நலன் குறித்த எந்த விஷயத்திலும் ஐக்கிய முற்போக்கு அரசு தனது கடமையை விட்டுக் கொடுக்காது என்றார் பிரணாப்.
-
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே











Click it and Unblock the Notifications