தண்டவாளத்தில் விரிசல்-தப்பிய ரயில்கள்
திருச்சி: திருச்சி ரயில் நிலையத்தில், தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் சரியான நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
திருச்சி ஜங்ஷனுக்கும் பொன்மலை ரயில் நிலையத்துக்கும் இடையிலான தண்டவாளத்தில் பெரும் விரிசல் ஏற்பட்டிருந்தது. இதை நேற்று நள்ளிரவு கேங்மேன்கள் கண்டுபிடித்தனர். இதுகுறித்து உடனே அதிகாரிகளுக்கு அவர்கள் தெரிவித்தனர். இதனால் திருச்சி ஜங்ஷனுக்கும் திருச்சி டவுன் ஸ்டேஷனுக்கும் இடையிலான போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
அந்த மார்க்கத்தில் செல்லும் ரயில்கள் பல்வேறு ஸ்டேஷன்களில் நிறுத்தப்பட்டன. சென்னை-செங்கோட்டை இடையிலான பொதிகை எக்ஸ்பிரஸ், சென்னை-திருநெல்வேலி இடையிலான நெல்லை எக்ஸ்பிரஸ் ஆகியவை திருச்சி டவுன் ஸ்டேஷனில் நிறுத்தப்பட்டன.
சென்னை-மதுரை இடையிலான பாண்டியன் எக்ஸ்பிரஸ் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. திருவனந்தபுரம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் பொன்மலை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. ராமேஸ்வரம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் திருச்சி ஜங்ஷனில் நிறுத்தப்பட்டது.
இன்று அதிகாலை 4 மணிக்கு தண்டவாளம் ச ரிசெய்யப்பட்டு போக்குவரத்துத் தொடங்கியது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications