திருச்சியில் திடீர் கன மழை-வெள்ளத்தில் தத்தளித்தது

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சி நகரில் நேற்று இரவு திடீரென பலத்த மழை பெய்தது. கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் நடந்த இந்த பேய் மழையால் நகரமே வெள்ளக்காடானது. மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துப் போனது.

திருச்சியில் நேற்று பகல் முழுவதும் நல்ல வெயில் அடித்தது. ஆனால் மாலையில் நிலைமை மாறியது. 5 மணிக்கு மேல் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. நிற்காமல் இரவு 10 மணி வரை பெய்த இந்த பேய் மழையால் நகரமே வெள்ளக்காடானது. போக்குவரத்து பெரும் பாதிப்பை சந்தித்தது.

மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் போல தண்ணீர் ஓடியது. பல சுரங்கப் பாதைகளில் நீர் சூழ்ந்தது. மேலப்புதூர் சுரங்கப் பாலத்தில் பேருந்து ஒன்று நீரில் மூழ்கிப் போனது. பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

நகர் முழுவதும் வெள்ளக் காடாக மாறியதால் வாகனப் போக்குவரத்து பெரும் பாதிப்பைசந்தித்தது. இரு சக்கர வாகனங்களை சுத்தமாக ஓட்ட முடியவில்லை. கார்கள் உள்ளிட்டவையும் தண்ணீரில் நின்று விட்டன.

காவிரி டெல்டாப் பகுதிகளிலும் நேற்று நல்ல மழை பெய்தது. இதனால் காவிரி ஆற்ளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+