அரசு டாக்டர்களை தாக்கினால் 10 வருடம் சிறை!
சென்னை: பணியில் இருக்கும் அரசு டாக்டர்களைத் தாக்கினால் அவர்களுக்கு 10 வருடம் சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் அவசரச் சட்டத்தை அரசு பிறப்பித்துள்ளது.
அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை சரியாக தராத, சரிவர கவனிக்காமல் அலட்சியமாக நடந்து கொள்ளும் டாக்டர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அதேபோல முறையான மருந்துகள் தராமலும், தவறான ஊசி போடுவதாலும் உயிரிழப்புகள் ஏற்படும்போதும் டாக்டர்கள் தாக்கப்படுவது வழக்கமாகி வருகிறது. மருத்துவமனைகளும் சூறையாடப்படுகின்றன.
இதிலிருந்து தங்களைக் காக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்து அரசு டாக்டர்கள் போராட்டங்கள் நடத்தியுள்ளனர். தொடர்ந்து கோரியும் வருகின்றனர்.
இந்த நிலையில் அரசு டாக்டர்களுக்கும், அரசுமருத்துவமனைகளுக்கும் பாதுகாப்பு தரும் வகையில் அதிரடியான உத்தரவு ஒன்றினை அரசு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறுகையில், அரசு டாக்டர்கள், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், நர்சுகள், மருத்துவ, நர்சிங் மற்றும் துணைமருத்துவ மாணவர்கள் ஆகியோருக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் அவசரச் சட்டம் ஒன்றை அரசு பிறப்பித்துள்ளது. இதற்கு ஆளுநர் பர்னாலா ஒப்புதல் அளித்துள்ளார்.
அதன்படி, மேற்குறிப்பிட்டவர்கள் மீது யாரேனும் தாக்குதல் நடத்தினால் அவர்களுக்கு 3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும். மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அதற்கான இழப்பீட்டை சம்பந்தப்பட்டவர்கள் தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அவசரச் சட்டத்திற்கு இந்திய மருத்துவ கழகம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications