அரசுக்கு ஆதரவு-தயாநிதிக்கு வீரமணி பாராட்டு
சென்னை: மத்திய அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பேன் என்று கூறிய திமுக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கு திராவிட கழக தலைவர் கி.வீரமணி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கி.வீரமணி வெளியிட்டு அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 22ம் தேதி (இன்று) லோக்சபாவில் சந்திக்க இருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில், ஆட்சிக்கு ஆதரவாகத்தான் வாக்களிப்பேன். திமுகவுக்கும், தலைமைக்கும் விரோதமாக நான் ஒருபோதும் நடந்து கொள்ள மாட்டேன் என்று திமுகவின் மத்திய சென்னை தொகுதி எம்பி தயாநிதிமாறன் அறிவித்ததை திராவிட கழகம் வரவேற்று மகிழ்கிறது. பாராட்டுகிறது.
அண்ணா சொன்ன கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவற்றில் இருந்து நழுவ மாட்டேன் என்று அவர் கூறியிருப்பது மிகச் சரியானது. நீர் அடித்து நீர் விலகாது என்பது பழமொழி. விலகக் கூடாது என்பது நியாயமும்கூட.
திமுகவை அழிக்க வேறு எவராலும் முடியாது. ஆனால் அவர்களுக்குள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று 1969ல் பெரியார் கூறிய அறிவுரை காலத்தினால் செதுக்கப்பட்ட கல்வெட்டாகும். அது என்றும் பொருந்தும்.
தயாநிதியின் இந்த தெளிந்த நிலைப்பாட்டினை, அவர் தொடர்புள்ள ஊடகங்களும் பின்பற்ற வேண்டும். அதன் மூலம் முதல்வரின் நல்லாட்சியின் பயன்கள் மேலும் தொடர வழி வகுக்கும் என்ற வேண்டுகோளையும் தி.க. விடுக்கிறது.
அண்ணா சொன்னது போல நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்று வீரமணி கூறியுள்ளார்.
-
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications