மின் பற்றாக்குறை: ஜெ. தான் காரணம்-கருணாநிதி
சென்னை: ஜெயலலிதா தனது ஆட்சிக் காலத்தில் மின் உற்பத்தித் திட்டங்களை உருவாக்கியிருந்தால் இப்போது மின் பற்றாக்குறையே ஏற்பட்டிருக்காது என்று முதல்வர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
முதல்வர் கருணாநிதி வெளியிட்ட கேள்வி-பதில் அறிக்கை:
கேள்வி: கச்சத்தீவு பற்றி கருணாநிதி கண் துடைப்பு நாடகம் ஆடுவதாக ஜெயலலிதா கூறுகிறாரே?
பதில்: கடந்த 1991ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி தலைமைச் செயலக கோட்டை கொத்தளத்தில் நின்று, கச்சத் தீவை மீட்டே தீருவேன் என முழங்கிய ஜெயலலிதா, ஆட்சியில் இருந்த 2 முறையும் கச்சத்தீவை மீட்டுவிட்டாரா? அல்லது எதையாவது மீட்டிக் கொண்டிருந்தாரா?
கேள்வி: தமிழக மின் வாரியம் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்கு முயற்சி எடுப்பதற்கு அடிப்படை காரணம் என்ன?
பதில்: தெளிவாக அனைவருக்கும் புரிந்த காரணம்தான். கடந்த ஆட்சியில் ஜெயலலிதா, எதிர்க்கட்சிகளையும், அரசு அலுவலர்களையும், தொழிலாளர்களையும் நசுக்குவதில் காட்டிய ஆர்வத்தை மின் உற்பத்தித் திட்டங்களில் காட்டியிருந்தால் இப்போது மின் பற்றாக்குறையே ஏற்பட்டேயிருக்காது.
கேள்வி: தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளியைப் போல மத்திய அரசு காட்சி அளிக்கிறது என்ற அத்வானியின் பேச்சு?
பதில்: அவருடைய தகுதிக்கு அந்தப் பேச்சு சரியல்ல.
கேள்வி: பிரதமர் பதவிக்கு மாயாவதியை முன்னிலைப்படுத்தியதால் பாஜக கூட்டணி அதிருப்தி அடைந்துள்ளதாக செய்தி வந்துள்ளதே?
பதில்: 'எதிரிக்கு எதிரி நண்பன்' என்ற முறையில் உணர்ச்சி வேகத்திற்கு அடிமையாகிறவர்கள் அறவழியில் வெற்றியை அடைய முடியாது. அணுசக்தி ஒப்பந்தம் உட்பட ஒவ்வொரு நடவடிக்கையையும் நாட்டு நலனுக்காகவே எடுத்து வருவதாக நேற்றைய தினம் பிரதமர் மன்மோகன் சிங் கூறிய வார்த்தை வெற்றி பெறும் என்றே நம்புகிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications