குதிரை பேரத்துக்கு கிடைத்த வெற்றி-வைகோ
நெல்லை: நம்பிக்கை ஓட்டெடுப்பில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு கிடைத்துள்ள வெற்றி தரகு மூலம் கிடைக்க வெற்றி என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
நெல்லையில் மதிமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தல் நிதியளிப்பு நன்கொடை சீட்டு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் வைகோ பேசியதாவது:
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசுக்கு நம்பிக்கை ஓட்டெடுப்பில் கிடைத்துள்ள வெற்றி, தரகு வேலை மூலம் கிடைத்த வெற்றியாகும். 1999ல் மத்திய அரசின் மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பின்போது பிரதமராக இருந்த வாஜ்பாய் இது போன்ற வேலையில் ஈடுபடவில்லை.
வாஜ்பாய் தோல்வியை ஆரோக்யமாக எடுத்துக் கொண்டார். ஜனநாயகத்திற்கு இழிவான செயலை மன்மோகன் சிங் அரசு செய்துள்ளது. அந்த அரசு மக்களின் நம்பிக்கையை விரைவில் இழக்கும். தற்போதைய வெற்றி தற்காலிகமானதுதான்.
நம்பிக்கை ஓட்டெடுப்பில் அரசை எப்படியாவது காப்பாற்றிக் கொள்ள மத்திய அரசு வெட்கக்கேடான குதிரை பேரம் போன்ற வெட்கக்கேடானச் செயல்களில் ஈடுபட்டுள்ளது.
குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை என மத்திய அமைச்சர்கள் அறிவித்தாலும், மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ள சிபு சோரன், தனக்கு நிலக்கரித்துறை அமைச்சர் பதவி கொடுப்பதாக பிரதமர் உறுதியளித்துள்ளார் என பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
குதிரை பேரத்திற்கு வேறு உதாரணம் இதை விட வேண்டுமா? மன்மோகன் சிங் இதை மறுத்துள்ளாரா? நவம்பரில் நாடாளுமன்ற தேர்தல் வரும். அதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் அதிமுக-மதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்றார்.
பின்னர் மதுரை வந்த அவர் நிருபர்களிடம் பேசுகையில், திராவிட இயக்க வரலாற்றில் மகத்தான இடம்பெறும் வகையில் மதுரையில் மண்டல மாநாடு, அண்ணாதுரை நூற்றாண்டு விழா மாநாடாக செப்டம்பர் 15ம் தேதி நடக்க உள்ளது.
அவரது புகைப்படக் கண்காட்சியும் நடத்தப்படும். அணையா விளக்கும் ஏற்றப்படும்.
இலங்கை அரசை கண்டித்து வரும் 27ம் தேதி ராமேஸ்வரத்தில் எனது தலைமையில் உண்ணாவிரதம் நடக்கும் என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications