கலெக்டர் பெயரில் சான்றிதழ்-வி.ஏ.ஓவுக்கு சிறை
கரூர்: கரூரில் கலெக்டர் பெயரில் போலி சான்றிதழ் தயாரித்து மோசடி செய்த கிராம நிர்வாக அலுவலருக்கு மூன்று ஆண்டுகள் சிறை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
கரூர் ஆதிகிருஷ்ணபுரத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். புத்தாம் புதூர் கிராம நிர்வாக அதிகாரி சக்திவேல், வெங்கமேடு ஜெயச்சந்திரன், திருமாநிலையூர் வக்கீல் குமாஸ்தா சீனிவாசன் ஆகியோர் மோசடி வேலையில் ஈடுபடு வந்துள்ளனர்.
கலெக்டர், ஆர்டிஒ, தாசில்தார் அலுவலக ரப்பர் ஸ்டாம்புகளை போலியாக தயாரித்து பலருக்கும் போலி சான்றிதழ்களை வழங்கியுள்ளனர்.
இந்த போலி ஆவணங்கள் மூலம் இவர்கள் மோசடி வேலைகளில் ஈடுபட்டு வந்தது வருவாய்துறையினருக்குத் தெரியவந்தது.
இந்த நிலையில் கரூர் ஆர்டிஒ அந்த சான்றிதழ்களை சரி பார்த்த போது அவரது கையெழுத்தை போலியாக போடப்பட்டுள்ளதை அறிந்து கரூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ராமலிங்கம், சக்திவேல், வெங்மேடு ஜெயசந்திரன், சீனிவாசன் ஆகியோரை கைது செய்து நீதிமந்றத்தில் ஆஜர் செய்தனர்.
இந்த வழக்கு கரூர் ஜூடிசியல் நீதி மன்றத்தில் மாஜிஸ்திரேட் ஜெயந்தி முன்னிலையில் வழக்கு நடைபெற்று வந்தது.
வழக்கின் முடிவில் மாஜிஸ்திரேட் ஜெயந்தி தனது தீர்ப்பில் நான்கு பேருக்கும் தலா மூன்று ஆண்டு ஜெயில் தண்டனையும், தலா 1500 ரூபாய் அபதாரமும் விதித்து தீர்ப்பு கூறினார்.


Click it and Unblock the Notifications
