ஜெனரேட்டரில் தலை முடி சிக்கி பெண் சாவு
சென்னை: ஜெனரேட்டரில் தலை சிக்கி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை பம்மல் அண்ணாநகரைச் சேர்ந்தவர் ஜாவேத். இவரது மனைவி பரானா. 38 வயதாகும் பரானாவுக்கு இரு மகன்கள் உள்ளனர்.
பி.காம் படித்துள்ள பரானா, பெரியமேட்டில் உள்ள பிரேமா பேலஸ் என்கிற லாட்ஜில் கணக்காளராக வேலை பார்த்து வந்தார்.
தற்போது சென்னை மாநகரில் ஒரு மணி நேர மின்தடை அமல் செய்யப்பட்டுள்ளது. பெரியமேடு பகுதியில் பிற்பகல் 12 மணி முதல் 1 மணி வரை மின்சாரம் தடைபட்டு வருகிறது. இதனால் அந்த சமயத்தில் ஜெனரேட்டர் மூலமாக லாட்ஜில் மின்சாரம் கொடுக்கப்பட்டு வந்தது.
நேற்றும் அதுபோல கரன்ட் போனது. பின்னர் ஒரு மணியளவில் கரன்ட் திரும்ப வந்தது. இதையடுத்து ஜெனரேட்டரை ஆஃப் செய்வதற்காக பரானாரா சென்றார்.
ஜெனரேட்டர் இருந்த அறை மிகவும் குறுகியது. அதில் உள்ளே சென்று பரானா சுவிட்ச்சை ஆஃப் செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக பரானாவின் சேலைத் தலைப்பு ஜெனரேட்டரில் சிக்கிக் கொண்டது.
படு வேகமாக ஜெனரேட்டருக்குள் இழுக்கப்பட்டார் பரானா. அதில் சேலை பரானாவின் கழுத்தை இறுக்கியது. அவரது தலைமுடியும் ஜெனரேட்டருக்குள் சிக்கிக் கொண்டது.
அந்த சமயத்தில் லாட்ஜ் ஊழியர்கள் யாரும் அருகில் இல்லாததால் பரானாவைக் காப்பாற்ற முடியவில்லை. இதனால் பரானா பரிதாபமாக உயிரிழக்க நேரிட்டு விட்டது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications