இறந்த பிரமுகர் உடலுடன் தேமுதிக மறியல்
சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் ஊரப்பாக்கத்தில் படுகொலை செய்யப்பட்ட தேமுதிக தொண்டரணி செயலாளர் பாலாஜியின் உடலுடன், தேமுதிகவினர் இன்று சாலை மறியல் செய்ததால், ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஊரப்பாக்கம் ஐயஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி (34). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். காட்டாங்கொளத்தூர் ஒன்றிய தேமுதிக தொண்டரணி செயலாளராகவும் இருந்து வந்தார்.
நேற்று மாலை நான்கு மணியளவில் பாலாஜி வீட்டிலிருந்து பைக்கில் ரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலையில் உள்ள டீக்கடைக்கு சென்றார். அப்போது வழியில் இருந்த டாஸ்மாக் கடை அருகே ஒரு கும்பல் பாலாஜியை மடக்கி சரமாரியாக தாக்கினர்.
கத்தி, அரிவாள்களால் தாக்கப்பட்ட பாலாஜி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பிணமானார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. பாலாஜியின் உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தனது கணவர் கொலைக்கு திமுக ஊராட்சி மன்றத் தலைவர் குமார்தான் காரணம் என உயிரிழந்த பாலாஜியின் மனைவி கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து குமார் தலைமறைவாகி விட்டார்.
இன்று காலை ஊரப்பாக்கத்தில் தேமுதிகவினர் பெருமளவில் திரண்டனர். . பிரேத பரிசோதனை முடிந்த மருத்துவமனையிலிருந்து பாலாஜியின் உடலுடன் வந்த ஆம்புலன்ஸை மறித்து ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
படுகொலைக்கு நியாயம் கிடைக்கும் வரை அவரது உடலுக்கு இறுதி சடங்கு செய்யப்பட மாட்டாது என்றும், ஊராட்சி மன்ற தலைவர் குமாரை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரினர்.
தகவல் அறிந்தது கூடுவாஞ்சேரி இன்ஸ்பெக்டர் மாணிக்கம் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். கூடியிருந்த தேமுதிகவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அவர்கள் மறுத்து விட்டனர். இதையடுத்து அதிரடியாக இன்ஸ்பெக்டர் மாணிக்கம் ஆம்புலன்ஸில் ஏறி அதை ஓட்ட முயன்றார்.
இதைப் பார்த்த தேமுதிகவினர் ஆம்புலன்ஸ் முன்பு படுத்துக் கொண்டனர். இதனால் மாணிக்கத்தால் ஆம்புலன்ஸை ஓட்ட முடியவில்லை.
பாலாஜியின் உறவினர்களிடமும், தேமுதிக பிரமுகர்களிடமும், ஊர் பொதுமக்களிடம் அவர் போராட்டத்தை கைவிடும்படி கேட்டுக்கொண்டார். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு சாலை மறியல் கைவிடப்பட்டது.
தேமுதிகவினரின் இந்தப் போராட்டத்தால் ஜி.எஸ்.டி. சாலையில் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications