அரசு அலுவலகங்களில் மின் சிக்கனம்-உத்தரவு!
சென்னை: அரசு அலுவலகங்கள் மற்றும் அமைச்சர் அலுவலகங்களிலும் மின் சிக்கனத்தை கடைபிடிக்குமாறு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின் பற்றாக்குறை காரணமாக தொழிற்சாலைகளுக்கு வாரம் ஒரு நாள் கட்டாய விடுமுறை, சென்னையில் தினமும் ஒரு மணி நேரமும், மாநிலத்தின் மற்ற பகுதிகளுக்கு 2 மணி நேரமும், கிராமங்களில் 4 மணி நேரமும் மின்வெட்டு போன்ற கடுமையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.
அடுத்ததாக அரசு அலுவலகங்களிலும் அமைச்சர் அலுவலகங்களிலும் மின் சிக்கனம் கடைபிடிக்கும்படி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கான வழிமுறைகள் குறித்த சுற்றறிக்கை எரிசக்தி துறை மூலம் அனுப்பப்பட்டுள்ளது.
அதில், தேவையற்ற நேரங்களில் லைட், பேன், ஏசி ஆகியவற்றை நிறுத்திவிட வேண்டும். அலுவலர்கள் மேஜைக்கு ஒளி தரும் லைட், பேன் மட்டும் உபயோகிக்க வேண்டும். பகலில் அலுவலக அறைக்கு போதுமான வெளிச்சம் இருந்தால் தாழ்வாரம் மற்றும் நடைபாதைகளில் எரியும் விளக்குகளை நிறுத்தி விட வேண்டும்.
அலுவலகத்தில் 2 ஏசிக்கள் இருந்தால் ஒன்றை மட்டும் பயன்படுத்தலாம். அறையில் யாரும் இல்லாத நேரங்களில் ஏசி இயக்கத்தை தவிர்க்கலாம். கம்ப்யூட்டர் போன்ற அலுவலக பயன்பாட்டுக் கருவிகளை உபயோகிக்காதபோது நிறுத்தி வைக்கலாம். கம்ப்யூட்டர், மானிட்டர், ஜெராக்ஸ் போன்ற மெஷின்களை பயன்படுத்தாதபோது ஸ்லீப் மோடில் வைத்தால் 40 சதவீத மின்சாரத்தை மிச்சப்படுத்தலாம்.
ஜெராக்ஸ் மிஷினை அடிக்கடி பயன்படுத்தாமல், நகலெக்கும் பணிகளை ஒருங்கிணைத்து பயன்படுத்தவும். லேப்-டாப், மொபைல் ஆகியவற்றை சார்ஜ் செய்தவுடன் இணைப்பை துண்டித்து விட்டால் மின்சாரம் வீணாவதை தவிர்க்கலாம்.
இந்த அறிவுரைகளை சரியாக கடைபிடிப்பதை அனைவரும் உறுதி செய்ய வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications