தமிழகமும் தாக்கப்படலாம்-ஐபி எச்சரிக்கை, போலீஸ் உஷார்
சென்னை: பெங்களூர், அகமதாபாத் குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து தமிழகமும் தாக்கப்படலாம் என உளவுப் பிரிவு எச்சரித்துள்ளதால் மாநிலம் முழுவதும் காவல்துறையினர் மிகவும் விழிப்புடன் பணியாற்ற வேண்டும். எந்தவித அசம்பாவிதமும் நடைபெற இடம் தரக் கூடாது என முதல்வர் கருணாநிதி, காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்திலும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள் குறி வைக்கப்பட்டிருப்பதாக மத்திய உளவுப் பிரிவு தமிழக அரசை எச்சரித்துள்ளது.
இதையடுத்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. மீனாட்சி அம்மன் கோயில் பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இதேபோல மாநிலம் முழுவதும் உள்ள முக்கிய கோவில்களுக்கும் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முதல்வர் கருணாநி தலைமையில் காவல்துறை அதிகாரிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலாளர் திரிபாதி, டிஜிபி ஜெயின், சென்னை கமிஷனர் சேகர், கூடுதல் டிஜிபி விஜயக்குமார், சென்னை புறநகர் கமிஷனர் ஜாங்கிட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் ஏற்னவே எடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்பட்டது. தொடர்ந்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளுக்கு முதல்வர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
மக்கள் கூடும் இடங்களில், வழிபாட்டுத் தலங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும், மிகுந்த விழிப்புடன் செயல்பட்டு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications