ஆகஸ்ட் 8ல் சிரஞ்சீவி கட்சி உதயம்!
ஹைதராபாத்: ஆந்திர சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி தனது கட்சியை ஆகஸ்ட் 8ம் தேதி தொடங்கத் திட்டமிட்டுள்ளார். இக்கட்சியில் ரவுடிகளுக்கும், சமூக விரோதிகளுக்கும், ஊழல் பெருச்சாளிகளுக்கும் இடம் அளிப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாம்.
அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் அரசியல் என்பது அறிஞர் சாக்ரடீஸின் கருத்து. இப்போது நடிகர்களின் கடைசிப் புகலிடமாகவும் அரசியல் மாறியுள்ளது.
சமீப காலமாக தமிழகத்தில் நடிகர்கள் கட்சி தொடங்குவது அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் தெலுங்குத் திரையுலகமும் இணைந்துள்ளது.
தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியும் புதுக் கட்சி தொடங்கவுள்ளார். அதற்கான பெயர், கட்சிக் கொடி, சின்னம் ஆகியவை ரெடியாகி விட்டன. ஆனால் ஆரம்பிக்கும் தேதியைத்தான் தள்ளிப் போட்டுக் கொண்டு வருகிறார் சிரஞ்சீவி.
தேசிய அளவிலும், ஆந்திர அளவிலும் மாறிக் கொண்டிருக்கும் அரசியல் சூழலை கண்காணித்தபடி இருக்கும் அவர் சரியான சமயத்தில் களம் இறங்க காத்திருக்கிறார்.
இந்த நிலையில், ஆகஸ்ட் 8ம் தேதியன்று தனது கட்சியைத் தொடங்க அவர் திட்டமிட்டுள்ளதாக அவரது மைத்துனரான தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் கூறியுள்ளார்.
முதலில் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதி கட்சி தொடங்க முடிவு செய்யப்பட்டிருந்தது. தற்போது முன்கூட்டியே 8ம் தேதியன்றே கட்சியை தொடங்கப் போகிறார்களாம். ஹைதராபாத்தில் தொடக்க விழா நடைபெறவுள்ளது. லட்சக்கணக்கான தொண்டர்களை அன்று ஹைதராபாத்தில் திரட்ட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறதாம்.
இந்த நிலையில் சிரஞ்சீவி கட்சியில் குற்றப் பின்னணி கொண்டவர்கள், சமூக விரோதிகள், ரவுடிகள் ஆகியோருக்கு இடம் இல்லையாம்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications