காதல்: பெண் டாக்டருக்கு மிரட்டல்-டாக்டர் கைது
சென்னை: காதலிக்க மறுத்த பெண் டாக்டருக்கு மிரட்டல் விடுத்த டாக்டர் கைது செய்யப்பட்டார்.
சென்னையை அடுத்த நங்கநல்லூரைச் சேர்ந்தவர் டாக்டர் ரீடா (24) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் மேல்மருவத்தூரில் ஒரு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்.
இவர் சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட்டை சந்தித்து ஒரு புகார் கொடுத்தார். அதில்,
நான் எம்.பி.பி.எஸ். படித்தபோது என்னுடன் ரஞ்சித்குமார் என்பவர் படித்தார். குரோம்பேட்டையை சேர்ந்த அவரும் நானும் காதலித்தோம். நாளடைவில் அவரது நடவடிக்கை எனக்கு பிடிக்கவில்லை. மற்றவர்களிடம் பேசுவதை சந்தேகத்துடன் பார்ப்பதோடு மட்டுமின்றி கண்டித்தார்.
இதனால் அவருடன் பழகுவதை தவிர்த்தேன். ஆனால் அவர் என்னை தொடர்ந்து காதலித்து வருவதாக சொல்லி தொல்லை தருகிறார். அவரது காதலை நிராகரித்து விட்டாலும் கூட என்னை பணிபுரியும் இடத்துக்கே வந்து தொந்தரவு தருகிறார்.
செல்போன் மூலம் செக்ஸ் எஸ்எம்எஸ்களை அனுப்புகிறார். தன்னை திருமணம் செய்து சந்தோஷப்படுத்த வேண்டும் என்று மிரட்டுகிறார். தனது ஆசைக்கு சம்மதிக்கவில்லை என்றால் என் குடும்பத்தை பற்றி கேவலமாக வெளியில் தகவல் பரப்புவேன் என்று மிரட்டுகிறார்.
எனவே டாக்டர் ரஞ்சித்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இது குறித்து பழவந்தாங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமிநாராயணனை விசாரிக்குமாறு ஜாங்கிட் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து ரஞ்சித் குமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications